சென்னை, மே 13 – ‘‘நீட் தேர்வின் ஒவ்வொரு படி நிலையிலும் மோசடி நிறைந்ததாகவே ‘நீட்’ இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவது போல் ‘நீட்’ல Scam இல்ல, ‘நீட்’டே ஒரு Scam தான்’’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘நீட்’ தேர்வு ரத்து குறித்து தமது கருத்தினை சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலை தளத்தில் பதிவிட்டி ருப்பதாவது:–
இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளி வந்து, Exam Cancel ஆகியி ருக்கு. இலட்சக்கணக்கான மாண வர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி யிருக்காங்க.
ஒரு தேர்வின் ஒவ்வொரு படி நிலையிலும் மோசடி நிறைந்த தாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்!
ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்து வக் கட்டமைப்பின் எதிர்கா லத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும்.
மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத் தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்.
புதிய அரசும் ‘நீட்’ தேர்வு எதிரானது என
அறிவிக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்தி ருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும்கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கி றேன்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
.png)
1 hour ago
16







English (US) ·