புதுடெல்லி, ஜூலை 23- சுற்​றுச்​சூழலுக்கு தீங்கு விளை​விப்​ப​தால், நாடு முழுவதும் பட்​டாசுக்கு தடை விதிக்​கக்​கோரி அர்​ஜுன் கோபால் என்​பவர் தொடர்ந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், பேரியம் என்ற மூலப்​பொருள் இல்​லாமல் பசுமை பட்​டாசு தயாரிக்க வேண்​டும், சரவெடி தயாரிக்​கக் கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்​தரவை தொடர்ந்து அதிக காற்று மாசுவை ஏற்​படுத்​தும் பேரி​யம் என்ற வேதிப்​பொருள் இல்​லாமல் நாடு முழு​வதும் பசுமை பட்​டாசு தயாரித்து விற்​பனை செய்​யப்​பட்ட நிலை​யில், பசுமை பட்​டாசு என்ற பெயரில் தடை செய்​யப்​பட்ட பேரி​யம் உள்ளிட்ட வேதிப்​பொருட்​கள் அடங்​கிய பட்​டாசு தயாரித்து விற்பனை செய்​யப்​பட்டு வரு​வ​தால், நாடு முழு​வதும் பட்​டாசுக்கு முழு​மை​யான தடை விதிக்க வேண்​டும் என்று மனு​தா​ரர் தரப்​பில் கோரிக்கை வைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் பட்​டாசுக்கு தடை விதிக்​கக்​ கோரிய வழக்கு நீதிபதிகள் எம்​.எம்​.சுந்​தரேஷ், பிரசன்​னா, எம்​.வ​ராலே ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது, இதனைத் தொடர்ந்து நீதிப​தி​கள், பசுமை பட்​டாசில் இருக்​கும் நிறை, குறை​கள், பாதிப்பு​கள் குறித்த அறிக்​கையை இரண்டு வாரத்​தில் மத்​திய மாசுக் கட்​டுப்​பாட்​டு வாரி​யம்​ தாக்​கல்​ செய்​ய உத்​தரவிட்​டு வழக்கை ஒத்திவைத்தனர்.