பழநியைத் தொடர்ந்து காரைக்குடியிலும் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் போலி ஆவணம் மூலம் அபகரிப்பு கிராம மக்கள் புகார்

57 minutes ago 7

காரைக்குடி, ஜூலை 23- காரைக்குடியில் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரி களின் துணையுடன் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக காரைக்குடி நகர் பகுதியில் பல நூறு ஏக்கர் நிலம் உள்ளது.

அதில் புதிய பேருந்து நிலையம் அருகே முடியரசன் சாலையில் சர்வே நம்பர் 392இல் பார்ட் 2இல் தற்போது சந்தை மதிப்பின்படி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் 27 சென்ட் இடம் உள்ளது. இதனை தனிநபர் ஒருவர் 1975இல் கோயில் டிரஸ்டியாக இருந்தவர் எழுதி கொடுத்தது போல் போலி கையெழுத்து போட்டு ஆவணம் தயார் செய்து கோயில் டிரஸ்டிகளை பார்ட்டியாக சேர்க்காமல் 2011இல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளனர். அதன் மூலம் அந்த தனிநபர் அவரது மனைவி பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலரி டம் கடந்த ஜூன் மாதம் பட்டா மறுதல் செய்ய மனு அளித்துள்ளனர். இதற்கு கோயில் நிலங்களுக்கு என உள்ள தாசில்தாரிடம் தடையில்லா சான்று பெற்றுள் ளனர். இதன் மூலம் மாவட்ட வருவாய் அலுவரிடம் இருந்து பட்டா மாறுதல் செய்வதற்கான உத்தரவும் பெற்றுள்ளனர். இந்த உத்தரவின்படி நேற்று (22.7.2026) கோயில் இடத்தை இரண்டு மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடத் துவங்கினர்.

போலி ஆவணங்கள் மூலம் இந்த இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து இடத்தை சுத்தம் செய்யும் தகவல் கிராம மக்கள் மற்றும் பரம்பரை அறங்காவல் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தெரிய வந்துள்ளது. தாசில்தார் ராஜா மற்றும் வடக்கு காவல் துறை ஆய்வாளர் ஆகியோருக்கு ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும் என மனு அளித்தனர். அவர்கள் நிகழ்வு இடத்திற்கு வந்து சுத்தம் செய்யும் பணிகளை நிறுத்தியதோடு இரண்டு மண் அள்ளும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

காரைக்குடி நகரின் மய்யப்பகுதியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற நிகழ்வுஅப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்ெகனவே பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த விவகாரம் தற்ேபாது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் சிவகாசியில் கால்நடைத் துறைக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்புள்ள நிலத்தை தனிநபர் பத்திரப்பதிவு செய் துள்ளார்.

தற்போது, காரைக்குடியில் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை தனிநபர் பட்டா மாற்ற உத்தரவு பெற்று சுத்தம் செய்தது போன்ற தொடர் நிகழ்வுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article