“பட்ஜெட்டில் நமக்கு ‘ஜீரோ’ கொடுத்த பாஜகவுக்கு தேர்தலில் அதையே திருப்பி கொடுப்போம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

12 hours ago 17

Last Updated:Feb 07, 2026 6:40 PM IST

”பட்ஜெட்டில் நமக்கு ஜீரோ கொடுத்த அவர்களுக்கு நாமும் அதே ஜீரோவை கொடுக்க வேண்டும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

News18
News18

விருதுநகர் மாவட்டத்தில் திமுக தென்மண்டல இளைஞரணி மாநாடு இன்று நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சரும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது; “தாய் மொழியான தமிழுக்கு பல்வேறு காலகட்டங்களில் ஆபத்து வந்தபோது, அதனை கடுமையாக போராடி தடுத்து இருக்கிறோம். ஆனாலும், மும்மொழி கொள்கை எனும் பெயரில் இந்தியை திணிக்கும் ஆபத்து இன்றும் இருக்கிறது. மொழியை அழித்தால், நம் அடையாளத்தை அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள்.

நமக்கு கல்வி எதற்கு என்று ஒதுக்கிவைத்திருந்தார்கள். வேலைகளில் இடம் கிடையாது. அந்த அநீதியை இட ஒதுக்கீட்டால் மாற்றினோம். ஆனால், தற்போது நீட் போன்ற தேர்வுகளால் பழைய முறையை உண்டாக்குகிறார்கள்.

மாநிலங்களின் கூட்டமைப்புத்தான் இந்தியா. போராடி மாநிலத்திற்கு அதிகாரங்களை பெற்றோம். இந்தியாவில் முதலில் மாநில கட்சி ஆட்சியை பிடித்தது திமுக. தற்போது மீண்டும் மாநில அதிகாரங்கள் ஒன்றியத்தில் குவித்துவருகிறார்கள். மாநில கட்சிகள் இருக்கக்கூடாது என பாஜக செயல்படுகிறது. ஆனால், அவர்களால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு.

அடிமைகளும், துரோகிகளும், எதிரிகளும் சேர்ந்து மாநிலத்தின் சுயமரியாதையை அடகுவைக்க முயற்சிக்கிறார்கள். சுயமரியாதையை விட்டுக்கொடுத்த இயக்கத்தை வீழ்த்த வேண்டும். இனும் பல நூற்றாண்டுகளுக்கு எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்கமுடியாது. நாம் தான் ஏழாவது முறையும் ஆட்சி அமைக்கப்போகிறோம். இதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.

அனைத்து வகையான அமைப்புகளின் தரவரிசை பட்டியலிலும் தமிழ்நாடுதான் டாப். தமிழ்நாடுதான் சூப்பர் ஸ்டார் ஸ்டேட். அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது. தேர்தலை மனத்தில் வைத்துதான் பட்ஜெட்டில் எதாவது வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இந்த முறையும் அவர்கள் கொடுத்தது ‘ஜீரோ’; எனவே நாமும் தேர்தலில் அவர்களுக்கு அதே ‘ஜீரோ’ தானே கொடுக்க வேண்டும்” இவ்வாறு பேசியுள்ளார்.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

“பட்ஜெட்டில் நமக்கு ‘ஜீரோ’ கொடுத்த பாஜகவுக்கு தேர்தலில் அதையே திருப்பி கொடுப்போம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Read Entire Article