"பட்டாசு வெடித்து, பேனர் வைத்து மக்களுக்கு இடையூறு செய்யாதீங்க" - தொண்டர்களுக்கு தவெக அலர்ட்

9 hours ago 12

Last Updated:May 12, 2026 6:52 PM IST

தவெக-வினர் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

என்.ஆனந்த்
என்.ஆனந்த்

பொதுமக்களுக்கு இடையூறாக கொண்டாட்டங்களில் ஈடுபடும் தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை வரவேற்று தமிழ்நாட்டில் ஆங்காங்கே தவெகவினர் பேனர் வைத்திருந்தனர். இது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் ஈடுபடக் கூடாது என்று தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் விஜய் மிகப் பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அதை நோக்கியே பயணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தவெக-வினர் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

Read Entire Article