பிரபாஸ். - படம்: ஜிக்யூ இந்தியா
‘பாகுபலி’ பிரபாசின் விருந்தோம்பலுக்கு ஈடு இணையில்லை என்று திரையுலகத்தினர் மெச்சிக்கொள்கிறார்கள்.
பிரபாசின் அழைப்பின்பேரில் அவரது வீட்டுக்கு விருந்துக்காக செல்பவர்கள் அங்கு தடபுடல் ஏற்பாடுகளைச் பார்த்து வியந்துபோனதாகப் பலமுறை கூறியுள்ளனர்.
இப்படி வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பது மட்டுமல்லாமல், படப்பிடிப்புத் தளங்களிலும் படக்குழுவினருக்கு அவர் இன்ப அதிர்ச்சி கொடுப்பாராம்.
பிரபாஸ் நடித்த ‘ஆதி புருஷ்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்தபோது ஒருநாள் மதிய உணவு தயாராக நீண்ட நேரமானதால் ஏற்கெனவே பல நாள்களாக, வட இந்திய, மும்பை உணவு வகைகளைச் சாப்பிட்டு சலித்துப் போயிருந்த படக்குழுவினர் மதிய உணவு தாமதமானதால் கோபம் அடைந்திருந்தனர்.
இதையறிந்து வருத்தமடைந்த பிரபாஸ், அன்று இரவு சென்னை உணவு வகைகளை வரவழைத்து உணவளிக்கப் போவதாக கூறி சமாதானப்படுத்தினார்.
“மும்பையில் உள்ள ஏதோ ஒரு தென்னிந்திய உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்கப் போகிறார் என்றுதான் எல்லாரும் நினைத்தோம். நேரம் கடந்ததே தவிர உணவு வரவில்லை. ஒருவருக்கொருவர் சலித்துக்கொண்ட போதுதான் சென்னையில் இருந்தே விமானம் மூலம் பிரபாஸ் உணவை வரவழைத்தார் என்பதே தெரிய வந்தது.
“அனைவரும் வியந்து போனோம். சிறிது நேரத்தில் உணவு வந்ததும் அனைவருக்கும் தன் கையாலேயே அதைப் பரிமாறி மகிழ்ந்தார் பிரபாஸ்,” என்று ‘ஆதி புருஷ்’ படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர் ஒருவர் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
.png)





English (US) ·