பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு தலைமை செயலகம் முன்பு கைது… நடந்தது என்ன? 

5 hours ago 7

Last Updated:Jul 21, 2026 2:45 PM IST

சினிமா மற்றும் தனியிசை பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு தலைமை செயலகம் முன்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

சினிமா மற்றும் தனியிசை பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு தலைமை செயலகம் முன்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நீட் தேர்வை ரத்துசெய்யகோரி காக்ரோச் ஜனதா பார்டி சார்பாக நேற்று டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  பேரணி நடத்தும்போது காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் தடுத்தனர். இதில் பல மாணவர்கள் காவல்துறையினரால் தாக்குதலுக்கு உள்ளாகினர்.  இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு இடங்களில் நீட் தேர்வு ரத்து செய்ய கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் சென்னை தலைமைச் செயலகம் முன்பாக ராப் பாடகர் அறிவு நீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டார். நான்கு பேருடன் வந்து கோஷமிட்டதால் காவல்துறையினர் பாடகர் அறிவு உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.  இதையடுத்து அவரை காவல்துறையினர் அங்கிருந்து கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Read Entire Article