அராஜகத்தில் ஈடுபட்ட ரவுடிக் கும்பலில் 5 பேர் சிறையில் அடைப்பு.
Published:Just NowUpdated:Just Now
மதுரை மாநகரப் பகுதியிலுள்ள வண்டியூர், சௌராஷ்டிராபுரத்தில் கடந்த 10 ஆம் தேதி இரவு கஞ்சா போதையில் கையில் வாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்ற ரவுடிக் கும்பல் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளது.
கைது
அதுமட்டுமின்றி சாலையில் சென்ற பொதுமக்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டியதோடு சாலையோரம் நின்ற கார், பைக்குகளைக் கீழே தள்ளி அடித்து உடைத்து நொறுக்கியுள்ளனர்.
அந்தப் பகுதியில் உள்ள கடைகளை அடைக்கச் சொல்லி கடைக்காரர்களை மிரட்டியும், அடித்தும் உள்ளனர்.
கஞ்சா போதை ரௌடிகள்
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டு தப்பியோடிய ஹம்சாத் ஹுசைன் (22), மருதுபாண்டி (24), லட்சுமணன் (22), அருண் (22) சந்தோஷ் ஆகிய ஐவரையும் கைது செய்து, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அட்ராசிட்டி செய்த மேலும் 5 நபர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்