"மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்கப்படும்" - சி.டி.ஆர். நிர்மல்குமார்

1 hour ago 11

''கடந்த ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் 400 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. அதில் நிறைய விசாரிக்கப்படாமல் இருக்கிறது. அதில் மக்களின் பணம் திருடப்பட்டுள்ளது. அது விசாரிக்கப்பட வேண்டும்" - சி.டி.ஆர்.நிர்மல்குமார்.

Published:Just NowUpdated:Just Now

சி.டி.ஆர் நிர்மல் குமார்

சி.டி.ஆர் நிர்மல் குமார்

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சி.டி.ஆர். நிர்மல் குமார் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "தவெக தலைவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஆறு நாள்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு நாளும் ஆக்கபூர்வப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுபான கடைகள் மூடுவது, பெண்களுக்கான பாதுகாப்பு ஆகிய அனைத்தும் ஆக்கப்பூர்வமாகச் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ அது 100% நிறைவேற்றப்படும்.

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க முதலமைச்சர் தமிழகம் முழுவதும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பழைய திட்டங்கள் எல்லாம் தொடரும் எனச் சொன்னதோடு, களிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டார்.

மதுரை மாநகராட்சி முழுவதும் கழிவுநீர் கால்வாய் தேவை என்கிற விஷயம் உள்ளது அது படிப்படியாக நிறைவேற்றப்படும்.

CTR Normal Kumar - TVK

CTR Normal Kumar - TVK

கடந்த ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. அதில் நிறைய விசாரிக்கப்படாமல் இருக்கின்றன. அதில் மக்களின் பணம் திருடப்பட்டுள்ளது. அது விசாரிக்கப்பட வேண்டும்.

இதுவரை மாநகராட்சியில் நடந்த ஊழல்கள் சீரமைக்கப்பட வேண்டும். ஊழலைத் தடுக்க வேண்டிய முன்னெடுப்பை முதல்வர் அவர்கள் முன்னெடுத்துள்ளார்.

பூரண மதுவிலக்குப் படிப்படியாகத்தான் செயல்படுத்த முடியும். முதல் கட்டமாக 717 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக மது விற்பனை தடுக்க வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார்.

நீட் தேர்வு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு தேர்வைக் கூட அவர்களால் ஒழுங்காக நடத்த முடியவில்லை. ஒவ்வொரு நாளும் மாணவர்கள் மனஉளைச்சலில் உள்ளனர். நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக மாறியுள்ளது.

சாதாரண மக்களுக்கு எட்டாத விஷயமாக நீட் மாறியுள்ளது. இது மாற்றப்பட வேண்டும். நீட் வேண்டாம் என்பதுதான் எங்களின் நோக்கம். நீட் தேர்வினால் எந்தப் பயனும் இல்லை.

சி.டி.ஆர் நிர்மல் குமார்

சி.டி.ஆர் நிர்மல் குமார்

திமுக ,அதிமுக இருவரும் இணைந்து ஆட்சி அமைக்க 100 சதவீதம் முயற்சி செய்தனர். அது அவர்கள் கூட்டணிக் கட்சியினர் மூலமாகத் தெரிந்து கொண்டோம். அந்தக் கள்ளக்கூட்டணி முறியடிக்கப்பட்டது.

முதல்வர் விஜய் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கவில்லை. ஒரு சில பேரை ஒரு சில நேரத்தில் சந்தித்தால் சரியாக இருக்காது. மக்களுக்கும் எதிராக இருக்கும் சூழ்நிலைக்கும் எதிராக இருக்கும் என்பதனால்தான் சந்திக்கவில்லை" என்றார்.

Read Entire Article