பன்முகம் கொண்டவர்: ஆர்.ஜே. பாலாஜியைப் பாராட்டிய சூர்யா

46 minutes ago 8

12ebde5c-3fe9-4fb5-88fb-9d91937246b0

ஆர்.ஜே. பாலாஜி (இடது), சூர்யா. - படம்: டைம்ஸ் நவ்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, திரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆர்.ஜே. பாலாஜியை ‘இயக்குநர்’ என்றுதான் அழைப்பாராம் சூர்யா.

“பாலாஜியின் வாழ்க்கைப் பயணத்தின்மீது எனக்குப் பெரும் மரியாதை உண்டு. இந்த ஒரு வாழ்க்கையில், என்னால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி, அதில் நிபுணத்துவம் பெற முடிந்தது. அதுதான் பெரிய சாதனை எனக் கருதினேன். ஆனால், பாலாஜியைக் கண்டதும் என் சிந்தனை அறவே மாறிவிட்டது.

“பாலாஜி பல திறமைகளைக் கொண்டவர். ஆர்ஜே, வர்ணனையாளர், நடிகர், எழுத்தாளர், இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவர். அதுமட்டுமன்றி, அவர் ஒரு சிறந்த நண்பர், தந்தை என்றும் கூறலாம்,” என்று சொன்னார் சூர்யா.

ஆர்.ஜே. பாலாஜியுடன் முப்பது நிமிடங்கள் பேசியபோது, அவர் ‘கருப்பு’ படத்தின் கதையைச் சுருக்கமாக விவரித்தாராம். உடனே அதில் நடிக்க சம்மதித்தார் சூர்யா.

பாலாஜியுடன் தாம் செலவிட்ட நேரத்தை மிகவும் ரசித்ததாகவும் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் பாலாஜி கடவுளுடன் இணைந்தே உள்ளதாகவும் சூர்யா கூறினார்.

“நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அதிசயம் நடக்கும். எனக்கும் கடவுள் பக்தி உண்டு. இருந்தாலும், எனக்கு ஒரு கஷ்டம் வரும்போது மட்டுமே நான் கோவிலுக்குச் செல்வேன்.

“ஆனால், ஆர்.ஜே. பாலாஜி எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் கடவுளுடன் இணைந்தே இருக்கிறார். அவர் எப்போதும் கடவுளுடன் உரையாடிக்கொண்டே இருக்கிறார்,” என்று தெரிவித்தார் சூர்யா.

Read Entire Article