மத்திய அரசு போல் மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு... முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை...

9 hours ago 14

Last Updated:May 12, 2026 6:30 PM IST

தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்கள் தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதிய ஊழியர்கள் ஆகியோருக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படியை 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை.

அகவிலைப்படி உயர்வு வழங்க கோரிக்கை

தமிழகத்தில் மத்திய அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியில் இதுநாள் வரையிலும் 58% வழங்கி வந்த நிலையில் தற்பொழுது விலைவாசி உயர்வின் காரணமாக 60 சதவீதமாக உயர்த்தி உள்ளது.

அகவிலைப்படி உயர்வு வழங்க கோரிக்கை

மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு வழங்கி உள்ளதை போல மாநில அரசும் 58 சதவீதத்திலிருந்து 60% உயர்த்து வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய்க்கு என்ஜிஓ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு வழங்க கோரிக்கை

இது குறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

அகவிலைப்படி உயர்வு வழங்க கோரிக்கை

தேர்தல் அறிக்கையின் பொழுது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படும் எனவும் முதல்வராக பதவி ஏற்றபோது அறிவித்திருந்தீர்கள்.

அகவிலைப்படி உயர்வு வழங்க கோரிக்கை

தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்கள் தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதிய ஊழியர்கள் ஆகியோருக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படியை 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தி வழங்குமாறு கேட்டு்கொள்கிறோம். உடனடியாக அகவிலைப்படி உயர்வு அறிவித்தால் உத்வேகத்துடன் பணியாற்றுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

EPF Pension | 12, 20 ஆண்டு சேவைக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? எளிய கணக்கீடு இதோ!

12, 20 ஆண்டு சேவைக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? | EPF Pension

  • EPFO கடந்த சில ஆண்டுகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

  • EPS-95 ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.7,500ஆக உயர்த்த அரசு பரிசீலனை.

  • ஓய்வூதியம் கணக்கீடு கடந்த 12 மாத சராசரி சம்பளம் பணிக்காலத்தை பொருத்தது.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article