அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மே 26ஆம் தேதி தமது வருடாந்திர மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
வால்ட்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ நிலையத்தில் அவர் அந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள உள்ளார்.
79 வயதாகும் திரு டிரம்ப் பொதுமக்களின் கவனத்துக்கு உட்பட்டதாக உள்ளது. 2025 ஜனவரியில் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றது முதல் அவர் தொடர்ந்து வேலைத் திட்டங்களை வகுத்து சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகிறார்.
வார இறுதிகளில் ஃபுளோரிடாவிலும் விர்ஜினியாவிலும் உள்ள தமது மன்றங்களில் கோல்ஃப் விளையாடி வருகிறார்.
கடந்த அக்டோபரில் வால்ட்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ நிலையத்தில் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்துகொண்ட திரு டிரம்ப், தமக்கு இதயப் பிரச்சினைகள் இல்லை என்றும் வழக்கத்திற்கு மாறான முடிவுகளைப் பரிசோதனைகள் தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
ஆயினும், அந்தப் பரிசோதனை முடிவுகள் ஊகங்களுக்கு வழிவகுத்ததால், அதன் விவரங்களை வெளியிட்டதற்காக அவர் பின்னர் வருந்தினார்.
இந்நிலையில், ஆக அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் திரு டிரம்ப்பின் கைகளில் சிறு காயங்கள் அல்லது நிறமாற்றத்தைக் காட்டியதால் அவரது உடல்நிலை தொடர்பான கூடுதல் கேள்விகள் எழுந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
.png)





English (US) ·