மாநில அளவிலான வாள்வீச்சுப் போட்டி: பள்ளி மாணவர் சாதனை!

2 hours ago 12

தாம்பரம், மார்ச் 9– செங்கல்பட்டு மாவட்ட வாள்வீச்சு சாதனையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வாள்வீச்சு சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான வாள்வீச்சுப் போட்டியில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் எஸ். தீபக் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சென்னையை அடுத்த தாம்பரம், சிறீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற “தமிழ்நாடு சப்-ஜூனியர் (14 வயதிற்குட்பட்டோர்) மாநில வாள்வீச்சு சாம்பியன்ஷிப் 2025-26” போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திறமையான வீரர்கள் பங்கேற்றனர்.

திருச்சி மாவட்டத்தின் சார்பாகப் பங்கேற்ற பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.தீபக் வாள்வீச்சின் கடினமான பிரிவுகளில் ஒன்றான சப்ரே பிரிவில் தனது அபாரமான நுணுக்கங்களையும், மின்னல் வேகத் தாக்குதலையும் வெளிப்படுத்தினார். கடுமையான போட்டிகளுக்கு இடையே எட்டாம் வகுப்பு மாணவரான தீபக், மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் (வெண்கலப் பதக்கம்) பிடித்துப் பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பள்ளி நிர்வாகம் வாழ்த்து:

இந்தச் சாதனையைப் பாராட்டி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பணித் தோழர்கள் உள்ளிட்டோர் தீபக்கிற்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். விளையாட்டுத் துறையில் தீபக் மென்மேலும் பல உயரங்களை எட்ட வேண்டும் என அனைவரும் வாழ்த்தினர்.

Read Entire Article