மாநிலங்களவைத் தேர்தல்; எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள்?

1 hour ago 15

Last Updated:Feb 26, 2026 8:18 PM IST

தமிழ்நாட்டில் காலியாகும் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

News18
News18

தமிழ்நாட்டில் காலியாகும் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் நிலையில், வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

மாநிலங்களவையில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, அந்தியூர் செல்வராஜ் ஆகிய திமுக எம்.பி.க்கள் மற்றும் அதிமுகவின் தம்பிதுரை, அதிமுக ஆதரவோடு எம்.பியான தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவி காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான, மாநிலங்களவைத் தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்காக, தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளர் சாந்தியை தேர்தல் நடத்தும் அலுவலராக இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், மார்ச் 5ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9ஆம் தேதி கடைசி நாளாகும். தற்போதுள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பிக்களையும், அதிமுக 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும்.

Read Entire Article