சென்னை, மே 12- ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்து வர்கள், 58 வயது பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் தைராய்டு புற்றுநோய் ஆகிய இரண்டிற்கும் ஒரே நேரத்தில் ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.
ரோபோடிக் மூலம்
அறுவை சிகிச்சை
வலது மார்பகத்தில் இருந்த கட்டிக்காக பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதனையில் அவருக்கு ஆரம்பக்கட்ட மார்பகப் புற்று நோய் இருப்பது உறுதியானது.
புற்றுநோய் வேறு எங்கும் பரவியுள்ளதா என்பதை அறிய ‘பெட்’ ஸ்கேன் செய்யப்பட்டபோது, அவரது தைராய்டு சுரப்பியிலும் ஆரம்பக்கட்ட புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்விரு புற்று நோய்களுமே ஆரம்ப நிலையிலேயே கண்டறியப் பட்டதால், காவேரி மருத்துவ மனையின் சிறப்பு மருத்துவர் குழு மேம்பட்ட ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே அறுவை சிகிச்சை மூலம் இரண்டுக்கும் சிகிச்சை அளிக்க முடிவு செய்தது.
இந்த அறுவை சிகிச்சையானது 4ஆவது தலைமுறை ‘டா வின்சி’ ரோபோடிக் தொழில்நுட்பம் மூலம் செய்யப்பட்டது. இதன் மூலம் மருத்துவர்கள் மிகச் சிறிய அளவிலான துளைகள் வழியாக அதிக துல்லியத்துடன் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.
மார்பகத்திற்கு அருகிலும் மற்றும் அக்குளின் கீழும் கவனமாக சிறிய துளைகள் போடப்பட்டு, ஒரே நடைமுறையில் தைராய்டு சுரப்பி மற்றும் மார்பகம் இரண்டையும் மருத்துவர்களால் அகற்ற முடிந்தது. வெளியே தெரியும் வகையிலான தழும்புகள் தவிர்க்கப்பட்டதே இம்முறையின் மிகப் பெரிய நன்மைகளில் ஒன்றாகும். இயற்கையாகவே மறைந்திருக்கும் பகுதிகளில் சிறிய அளவிலான துளைகள் இடப்பட்டதால், மிகக் குறைந்த தழும்புகளுடன் புற்றுநோய் பாதிப்பு முழுமையாக போக்கப்பட்டது.
காவேரி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை புற்று நோயியல் துறை முதுநிலை நிபுணர் மருத்துவர் சுஜய் சுசிகர் கூறுகையில், “இரு வேறுபட்ட புற்றுநோய் பாதிப்புகள் ஒரே நேரத்தில் கண்டறியப்பட்டது ஓர் அரிய நிகழ்வாகும். இதற்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க ரோபோடிக் முறையைத் தேர்ந்தெடுத்தோம். இதனால் சுற்றியுள்ள திசுக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் துல்லியமாக செயல்பட முடிந்தது.
மருத்துவப் பயனாளியும் வேகமாக குணமடைந்து விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்” என்றார். காவேரி மருத்துவமனைகளின் இணை நிறுவனரும் செயல் இயக்குநருமான மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
.png)
14 hours ago
14





English (US) ·