உறையூர், மார்ச் 9– திருச்சி மாவட்ட சதுரங்கக் கூட்டமைப்பு (TDCA) அங்கீகாரத்துடன், ஸ்டார் செஸ் பவுண்டேஷன் (STAR CHESS FOUNDATION) நடத்திய மாவட்ட அளவிலான சிறுவர்களுக்கான சதுரங்கப் போட்டி யில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
திருச்சி உறையூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், திருச்சி மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக மாணவர் இசட்.முகமது ரியாஸ் பங்கேற்றார்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தனது அபாரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்திய முகமது ரியாஸ், மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவரை பள்ளித் தாளாளர், முதல்வர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் பாராட்டி, தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
.png)
2 hours ago
10






English (US) ·