முக அடையாளத் தொழில்நுட்பம் மூலம் சிக்கிய பெண்

12 hours ago 13

59ddf693-caf9-4b19-aa6b-d6f914276553

51 வயது கேத்தரினுக்கு எட்டு நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Thief caught through facial recognition technology

Catherine Tan Lai Ying, 51, was sentenced to eight days in jail for stealing 19 bottles of Jacob's Creek wine, valued over S$550, from Sheng Siong Supermarket in Punggol Central. She committed theft seven times, starting September 2, 2025. Supermarket staff identified her through surveillance footage and subsequently used facial recognition technology, which Sheng Siong has used since April 2024, to confirm her involvement in multiple thefts. Catherine pleaded guilty to the charges.

Generated by AI

ஷெங் ‌சியோங் பேரங்காடியில் பல முறை மது போத்தல்களை (wine) திருடிய பெண், பேரங்காடியின் முக அடையாளத் தொழில்நுட்பத்தின் மூலம் சிக்கினார்.

கேத்தரின் டான் லை இங் என்னும் அந்த 51 வயதுப் பெண்ணுக்கு எட்டு நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (மே 12) தீர்ப்பளிக்கும்போது கேத்தரின் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒப்புக்கொண்டார்.

பொங்கோல் செண்ட்ரலில் உள்ள ஷெங் ‌சியோங் பேரங்காடியில் கேத்தரின் 19 ஜேகப்ஸ் கிரீக் மது போத்தல்களைத் திருடியுள்ளார். ஏழு முறை அவர் திருட்டுச் செயலில் ஈடுபட்டார்.

19 மது போத்தல்களின் விலை 550 வெள்ளிக்கு மேல் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதல்முறையாக கேத்தரின் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி மதுபோத்தல்களைத் திருடினார். மது போத்தல்கள் காணாமல் போனது குறித்து செப்டம்பர் 10ஆம் தேதி நடத்தப்பட்ட கணக்கு சரிபார்ப்பில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின்னர் பேரங்காடி ஊழியர்கள் கண்காணிப்பு படக்கருவிகளில் பதிவான காட்சிகள் மூலம் கேத்தரின் திருட்டுச் செயலில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்தனர்.

பிறகு ஊழியர்கள் கேத்தரின் முகத்தை முக அடையாளத் தொழில்நுட்பத்தில் பதிவேற்றினர். அதன்மூலம் கேத்தரின் பேரங்காடியில் திருடிய மற்ற சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வந்தன. அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

ஷெங் ‌சியோங் பேரங்காடி 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முக அடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது.

Read Entire Article