Last Updated:May 12, 2026 3:15 PM IST
முதலமைச்சர் விஜயின் தனிப்பட்ட ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல், அரசியல் சிறப்புப் பணி அலுவலர் OSD ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜயின் (அரசியல்) சிறப்புப் பணி அலுவலராக (OSD) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, தவெகவும், விஜயும் கவனிக்கப்பட்டதுபோலவே, ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் எனும் ஜோதிடரும் பரவலாக கவனிக்கப்பட்டார். தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய், ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலிடம் தனது அரசியல் உட்பட பெரும்பாலான விஷயங்களில் ஆலோசனை பெறுவார் என பரவலாகப் பேச்சுகள் எழுந்தன.
அதேசமயம், விஜய் முதலமைச்சராவார் என ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் கணித்ததாக பல வீடியோக்களும் இணையத்தில் பரவி வந்தன. அதேபோல், தேர்தல் முடிவுக்கு முன் தவெக தலைவராக, முதலமைச்சர் விஜய் திருச்செந்தூர், ஷீரடி உள்ளிட்ட ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணங்களிலும் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் அவருடனே இருந்தார். அப்போதும் இது பெரும் பேசு பொருளானது.
இந்நிலையில்தான் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலை முதலமைச்சர் விஜயின் (அரசியல்) சிறப்புப் பணி அலுவலராக (OSD) நியமிக்கப்பட்டு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஜய் மட்டுமின்றி இவர் இதற்கு முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் ஜோதிடராக இருந்துள்ளார்.
குறிப்பாக 1989 காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு ஜோதிடம் கணித்துக் கூறி, அதன்பிறகு அவர் முதலமைச்சராகியுள்ளார். அதேபோல், 1996 தேர்தலில் ஜெயலலிதா தோல்வி அடைவார் எனவும், அவர் சிறை செல்வார் எனவும் கணித்தார். அதுபோலவே நடந்தது என்பது நினைவுகூரத்தக்கது.

இன்று 7 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் வார்னிங்!
தமிழகத்தில் 7 மாவட்டங்கள், காரைக்காலில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.
மேற்கு தொடர்ச்சி மலை, கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யலாம்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
.png)





English (US) ·