Last Updated:Feb 22, 2026 5:54 PM IST
அவரது உயரம், உடல்வாகு மற்றும் அன்றைக்கு அவருக்கு இருந்த அடர்த்தியான தலைமுடி ஆகியவை பின்னால் இருந்து பார்க்கும்போது ரஜினியைப் போலவே இருக்கும்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான முத்து படத்தில் அவருக்கு காமெடி நடிகர் டூப் போட்டுள்ளார். இதுகுறித்த சுவாரசிய தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
'முத்து' படத்தில் ரஜினிகாந்த் குதிரை வண்டியை ஓட்டிச் செல்லும் பல காட்சிகளிலும், குறிப்பாக படத்தில் அதிகம் பேசப்பட்ட "குதிரை வண்டி சண்டை" காட்சிகளிலும் ரஜினிக்கு டூப்பாக காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா நடித்திருக்கிறார்.
ரமேஷ் கன்னா முத்து படத்தின் உருவாக்கத்தின்போது அந்தப் படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
ரமேஷ் கன்னாவின் உயரம், உடல்வாகு மற்றும் அன்றைக்கு அவருக்கு இருந்த அடர்த்தியான தலைமுடி ஆகியவை பின்னால் இருந்து பார்க்கும்போது ரஜினியைப் போலவே இருக்கும்.
ரஜினி மற்ற காட்சிகளில் நடித்துக்கொண்டிருக்கும்போது, தூரத்திலிருந்து எடுக்கப்படும் லாங் ஷாட்களில் ரமேஷ் கன்னாவை ரஜினியின் உடையை அணிய வைத்து நடிக்க வைத்துள்ளனர்.
ஒரு காட்சியில் குதிரை வண்டியில் ரஜினிக்கு டூப்பாக ரமேஷ் கன்னா அமர்ந்திருந்தபோது, படத்தின் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கிண்டலாக "ஏய் சூப்பர் ஸ்டார், வண்டியை ஒழுங்கா ஓட்டு" என்று கூறியுள்ளார்.
இந்த தகவல்களை சமீபத்தில் அளித்த பேட்டியில் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

TVK Vellore Campaign | வேலூரில் நாளை விஜய் பரப்புரை- எஸ்.பி.ஆய்வு!
TVK Vellore Campaign | வேலூரில் நாளை விஜய் பரப்புரை- எஸ்.பி.ஆய்வு!
TVK Vellore Campaign | வேலூரில் நாளை விஜய் பரப்புரை- எஸ்.பி.ஆய்வு!
TVK Vellore Campaign | வேலூரில் நாளை விஜய் பரப்புரை- எஸ்.பி.ஆய்வு!
.png)






English (US) ·