வெடிகுண்டு உள்ளதா என முதன்மை அணையிலும், துணை அணையிலும், தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிடும் மதகுப் பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்
Bomb threat to Mullaiperiyar Dam
A bomb threat emailed to the Thrissur District Court on Sunday claimed the Mullaperiyar dam would be blown up, causing a stir. The Thrissur District Collector alerted the Idukki District Collector, prompting a search of the main dam, auxiliary dam, and sluice gates by bomb disposal experts, Idukki police, and sniffer dogs. The meticulous search found no suspicious objects, and officials confirmed the threat was a hoax after several hours.
Generated by AI
இடுக்கி: முல்லைப் பெரியாறு அணையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்போவதாக வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) மின்னஞ்சல் வழியாக அந்த வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதனையடுத்து, அத்தகவல் திருச்சூர் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. உடனே அவரும் வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவலை இடுக்கி மாவட்ட ஆட்சியருக்குத் தெரியப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்களும் இடுக்கி காவல்துறையினரும் மோப்ப நாயின் துணையுடன் முதன்மை அணை, துணை அணை, தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிடும் மதகுகள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
ஒவ்வொரு பகுதியிலும் மிகுந்த கவனத்துடன் முழுமையாகச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பல மணி நேரம் விரிவாகச் சோதனை செய்தும் சந்தேகப்படும்படியான பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.