மே 10ஆம் தேதி பிற்பகல் 2.10 மணிவாக்கில் தெம்பனிஸ் ஸ்திரீட் 45ல் நிறுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் திருடப்பட்டதாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. - படம்: கூகல் வரைபடம்
தெம்பனிஸ் வட்டாரத்தில் மோட்டார்சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின்பேரில் 16 வயது இளையர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை குறித்து சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மே 10ஆம் தேதி பிற்பகல் 2.10 மணிவாக்கில் தெம்பனிஸ் ஸ்திரீட் 45ல் நிறுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் திருடப்பட்டதாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, அதிகாரிகள் நடத்திய விசாரணையிலும் கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காட்சிகள் மூலமும் சந்தேகப் பேர்வழி அடையாளம் காணப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, மே 11ஆம் தேதி அந்த இளையர் கைதுசெய்யப்பட்டார்; களவாடப்பட்ட மோட்டார்சைக்கிளும் மீட்கப்பட்டது.
இளையர்மீது புதன்கிழமை (மே13) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.
திருட்டுக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
.png)






English (US) ·