டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லமான லோக் கல்யாண் மார்க் அருகே போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வத்ராவை டெல்லி போலீஸார் இன்று கைது செய்தனர். NEET-UG 2026 தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பிரதமர் அலுவலகம் முன்பு தர்ணா
தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி நேற்று டெல்லியில் போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை கண்டித்தும், பிரதமர் மோடி மற்றும் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் பெரும் போராட்டம் நடத்தினார்கள். ராஜாஜி மார்க்கில் இருந்து லோக் கல்யாண் மார்க் வரை பேரணியாக சென்றனர். பின்பு பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
.png)
2 hours ago
7







English (US) ·