ராமன் கோயில் மோசடி வழக்கு: காவல்துறைக்குப் பதிலாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பொறுப்பை ஒப்படைத்தது ஏன்? உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

8 hours ago 5

புதுடில்லி, ஜூலை 21- ராமன் கோயில் நன்கொடை திருட்டு பற்றிய விசாரணையை உள்ளூர் காவல்துறைக்குப் பதிலாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்தது ஏன்? என்று உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது.

சி.பி.அய். விசாரணை கோரி மனுக்கள்

அயோத்தி ராமன் கோயிலில் பக்தர்கள் அளித்த நன்கொடைகள் திருட்டு போயின. இதுதொடர்பாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை விடுத்த வேண்டு கோளின் பேரில், திருட்டு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை உத்தரப்பிரதேச அரசு அமைத்தது.

அதே சமயத்தில், சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, நரேந்திர குமார் கோஸ்வாமி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.அய். பன்னோக்கு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்குரைஞர்கள் அஜய்குமார் ராய், தினேஷ்குமார் யாதவ் மனு தாக்கல் செய்தனர். ராஷ்டிரிய ஜனதாதள நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகர்சிங், அறக்கட்டளையின் ஒட்டுமொத்த நிதியையும் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

8 பேர் கைது

மேற்கண்ட 3 மனுக்களும் உச்சநீதி மன்றத்தில்  தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்தி, மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (20.7.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தனர்.

உத்தரப்பிரதேச அரசுசார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை ஏற்று மாநில அரசு நிலவர அறிக்கை தாக்கல் செய்துள்ளது. விசாரணை நடந்து வருகிறது. 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், ‘‘சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்து கிறதா?’’ என்று கேட்டனர். அதற்கு துஷார் மேத்தா, ‘‘உண்மைகளை வெளிக்கொணர சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, காவல்துறையினர்தான் விசாரித்து வருகிறார்கள். குற்றத்துக்கு முகாந்திரம் இருப்பதை மட்டுமே சிறப்புப் புல னாய்வுக் குழு கண்டு பிடித்துள்ளது’’ என்றார்.

ஒப்படைத்தது ஏன்?

நீதிபதிகள் கூறியதாவது:-

சிறப்புப் புலனாய்வுக் குழு வில் 2 மூத்த அய்.பி.எஸ். அதிகாரி களும், லக்னோ காவல்துறை தலைவரும் இடம்பெற்றுள்ளதாக அறிந்தோம். அவர்கள் நேர்மையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்ய பிரதான விசாரணை நடத்த முடியுமா?

வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பே ஒட்டுமொத்த விவகாரத்தையும் ஆய்வு செய்த சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் உள்ளூர் காவல்துறையினருக்குப் பதிலாக விசாரணை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது சரிதானா என்று உத்தரப்பிரதேச அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

அரசியல் ஆக்காதீர்கள்!

அதுபோல், மனுதாரர்களுக்கு ஒரு எச்சரிக்கை. இந்த பிரச்சினையை அரசி யல் ஆக்காதீர்கள். கோர்ட்டு, அரசியல் செய்வதற்கான இடமல்ல. இது ஒரு குற்றச்செயல் வழக்கு. முறையான விசாரணையை உறுதி செய்யத்தான் நாங்கள் இங்கு இருக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

ஒரு மனுதாரரின் வழக்கு ரைஞர் தேவத் காமத், ‘‘கோயில் கட்டப்பட்டபோது, ஒவ்வொரு வரிடமும் நன்கொடை கேட்டனர். தற்போது, அந்த ரசீதுகளைப் பாதுகாத்து, பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளோம்’’ என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், ‘‘27 ஆம் தேதி மீண்டும் விசாரிக்கும் போது, இதுபற்றி பரிசீலித்து, சில உத்தரவுகள் பிறப்பிப்போம்’’ என்று கூறினார்.

Read Entire Article