ரோன்95 பெட்ரோல் மானிய உச்சவரம்பைக் குறைக்க மலேசியா யோசனை

11 hours ago 11

53a3b37f-16cf-4ae9-8ce7-26221dfe5619

ஏப்ரல் மாதத்திலிருந்து 300 லிட்டருக்குப் பதிலாக 200 லிட்டர் ரோன்95 பெட்ரோலுக்கான மானியத்தை மலேசிய அரசாங்கம வழங்கத் தொடங்கியது. - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம் ரோன்95 பெட்ரோலுக்கான மானிய உச்சவரம்பைக் குறைப்பது பற்றி ஆலோசிக்கிறது.

மலேசியாவில் இவ்வாண்டு பொதுத் தேர்தல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. இருப்பினும், எரிபொருள் மானியத்தைத் தொடர அந்நாடு முடிவெடுத்துள்ளதாக மலேசியத் துணை நிதியமைச்சர் லியூ சின் டோங் தெரிவித்தார்.

ஆனால், மலேசியர்களின் தேவையைப் பூர்த்திசெய்ய மானிய விலையில் வழங்கப்படும் ரோன்95 பெட்ரோலுக்கான அளவைக் குறைப்பதுப் பற்றி அரசாங்கம் யோசிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் இவ்வாண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றாலும் ரோன்95 பெட்ரோல் மானிய விவகாரத்துக்கும் அதற்கும் தொடர்பிருக்காது என்று திரு லிம் கூறினார்.

எரிபொருள் மானியத்துக்கான மலேசியாவின் செலவினங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.

ஏப்ரல் மாதத்தில் மலேசியா 7 பில்லியன் ரிங்கிட்டை எரிபொருள் மானியத்திற்குச் செலவிடும் என்று மதிப்பிடப்படுகிறது.

நிதிச் சிக்கல்களைவிட எவ்வளவுத் தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ந்து வழங்குவதில்தான் இப்போது அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்று திரு லியூ வலியுறுத்தினார்.

மலேசிய அரசாங்கம் ஏப்ரல் மாதத்தில், தனது மிகவும் பிரபலமான ரோன்95 எரிபொருளுக்கான மானிய எரிபொருள் ஒதுக்கீட்டை ஒரு குடிமகனுக்கு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைத்தது.

Read Entire Article