வணிக நெட்வொர்க்கிங் மன்ற விருதுகள் 2026

1 hour ago 11

99b6de92-db9e-48c1-a045-797efa0074ef

வணிக நெட்வொர்க்கிங் மன்ற வணிக விருதுகள் - படம்: முனைவர் சின்னு பழனிவேலு

கோலாலம்பூரில் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்ற கோப்பியோ மலேசியா வர்த்தக மன்றத்தின் வணிக விருதுகள் 2026 நிகழ்ச்சியில், சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக, தொழிற்சபைத் தலைவர் டாக்டர் சின்னு பழனிவேலுவுக்குத் தங்கப் பிரிவில் ‘வணிக உன்னத விருது’ வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவிற்கான இந்தியத் தூதர் பி.என்.ரெட்டி விருதினை வழங்கினார்.

கடந்த மூன்று ஆண்டுகளில், சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக, தொழிற்சபைத், பல்வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது, அதில் இந்தியத் கண்டத்தைச் சேர்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உள்ளடக்கும். இந்த ஒப்பந்தங்கள் இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், முதலீடுகளை எளிதாக்கவும் அவர்களின் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.

இத்தகைய சிறப்பான பங்களிப்புகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை கோப்பியோ மலேசியா வர்த்தக மன்றம், கோப்பியோ அனைத்துலக வர்த்தக மன்றம் ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து வழங்கின.

விருது பெற்ற டாக்டர் சின்னு பழனிவேலு, சமூக மேம்பாட்டு நிதியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கல்வி, திறன் மேம்பாட்டு மூலம் இந்தியர்களை வலுப்படுத்துவது தமது இலக்கு என அவர் குறிப்பிட்டார். உலகெங்கிலும் உள்ள இந்தியச் சமூகம் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறது.

Read Entire Article