வண்டி வண்டியா பூசணிக்காய் காய்க்கணுமா? - விதையை இப்படி நட்டு பாருங்க...

19 hours ago 8

Last Updated:May 12, 2026 9:17 AM IST

பூசணிக்காய் விவசாயத்தில் அதிக மகசூல் பெறுவதற்கு சில எளிய குறிப்புகளை இங்கே காணலாம்..

விவசாய குறிப்புகள்

விவசாயத்தில் முக்கிய இடத்தைப் பெறும் பூசணி சாகுபடியில் நல்ல விளைச்சலை பெற சில எளிய முறைகளை பின்பற்ற வேண்டும் என்று விவசாய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக விதை விதைக்கும் முறையிலேயே கவனம் செலுத்தினால், பூசணி செடிகள் ஆரோக்கியமாக வளர்ந்து அதிக மகசூலை தரும் என கூறப்படுகிறது.

விவசாய குறிப்புகள்

பூசணி விதைகளை நேரடியாக மண்ணில் விதைப்பதற்கு முன்பு, அவற்றை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து வைத்தால் விதைகள் விரைவாக முளைக்கும். பின்னர் அந்த விதைகளை நன்கு உழுத மண்ணில் சரியான ஆழத்தில் ஊன்றி விதைக்க வேண்டும். இதனால் செடிகள் வலிமையாக வளர உதவுகிறது.

விவசாய குறிப்புகள்

விதை நட்ட பிறகு வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுவது போதுமானதாகும். அதிக தண்ணீர் விடுவதால் வேர் அழுகும் அபாயம் இருப்பதால், தேவையான அளவு மட்டுமே நீர் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

விவசாய குறிப்புகள்

மேலும் மாதத்திற்கு ஒரு முறை இயற்கை உரங்களை பயன்படுத்தினால் செடிகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, பூசணி காய்கள் நல்ல அளவிலும் தரத்திலும் விளையும். குறிப்பாக பசளை உரம், மாட்டு சாணம் போன்ற இயற்கை உரங்கள் பயன்படுத்துவது பயிரின் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

விவசாய குறிப்புகள்

எளிய பராமரிப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பூசணி சாகுபடியில் அதிக விளைச்சலையும், நல்ல வருமானத்தையும் பெற முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Aadhaar | ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. மத்திய அரசின் புதிய ரூல்ஸ் என்ன தெரியுமா?

Aadhaar | ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!

  • 5 வயதுக்குட்பட்டோருக்கு குடும்பத் தலைவர் மூலம் பதிவு கட்டாயம்.

  • நேபாளம், பூட்டான் மக்களுக்கு வழங்கும் ஆதார் 10 ஆண்டுகள் மட்டுமே செல்லும்.

  • போலி ஆவணங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article