வாக்குச்சாவடிகளில் நிரந்தர சாய்தளம்... தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!

55 minutes ago 13

Last Updated:May 16, 2026 5:47 PM IST

வாக்குச் சாவடிகளில் நிரந்தர சாய்தள வசதியை ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கும், மாநில அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News18
News18

மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச்சாவடிகளில் உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக் கோரி, மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, பொது கட்டிடம் என்பது அரசு கட்டிடம் மட்டுமல்ல; பொதுமக்கள் அணுகும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் கட்டிடங்களும் அடங்கும் எனக் கூறியுள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளது. வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் சாய்தளம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது; அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையமும் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதங்கள் அனுப்பியுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் அரசு கட்டிடங்கள், கல்வி நிறுவனங்களில் நிரந்தர சாய்தள வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை எனவும், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் தற்காலிக சாய்தளம் மட்டுமே அமைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் கூட வாக்குச் சாவடிகளாக அறிவிக்கப்பட்ட கட்டிடங்களில் நிரந்தர சாய்தளங்கள் அமைக்கும் பணிகள் முழுமை அடையவில்லை எனக் குறிப்பிட நீதிபதிகள், வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்படும் அரசு கட்டிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நிரந்தர சாய்தள வசதியை ஏற்படுத்துவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்துக்கும், மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல, தேர்தல் ஆணைய இணையதளங்கள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலும், பயன்படுத்தும் வகையிலும் இருப்பதை உறுதி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Read Entire Article