விஜயின் (அரசியல்) சிறப்புப் பணி அலுவலர்: சம்பளம், அதிகாரம் என்ன தெரியுமா?

12 hours ago 12

Last Updated:May 12, 2026 4:54 PM IST

ஒரு கட்சித் தலைவரின் தனிப்பட்ட ஜோதிடரை இப்பதவியில் அமர்த்தியிருப்பது தற்போதைய அரசியல் சூழலில் உற்றுநோக்கப்படுகிறது

 முதல்வர் அலுவலகத்தில், முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக (OSD - Political) தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளரும், விஜயின் தனிப்பட்ட ஜோதிடராக  அறியப்பட்ட ரிக்கி ராதன் பாண்டி வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில், இந்த நியமனம் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

 முதலமைச்சர் அலுவலகத்தில்  பணியாற்றும் தனிச் செயலாளர் மற்றும் சிறப்பு பணி அலுவலர் ஆகிய இரு பதவிகளுக்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன.  ஏற்கனவே, முதலமைச்சர் அலுவலகத்தில் ப. செந்தில்குமார், ஜி. லட்சுமி பிரியா ஆகிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் முதலமைச்சரின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்திய ஆட்சிப் பணி விதிகளின் கீழ் வரும் இப்பதவிகள், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், கோப்பு மேலாண்மை மற்றும் துறை சார்ந்த ஒருங்கிணைப்பு என முழுமையான நிர்வாக அதிகாரங்களைக் கொண்டவை. இவர்கள் நிர்வாக இயந்திரத்தின்  ஒரு அங்கமாகச் செயல்படுகிறார்கள். ஆனால், தற்போது நியமிக்கப்பட்டுள்ள ‘சிறப்பு பணி அலுவலர்’ (OSD) பதவி என்பது முற்றிலும் மாறுபட்ட தற்காலிகப் பணியாகும். இது முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.

 அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி, இந்த நியமனம் முழுக்க முழுக்க அரசியல் விவகாரங்களுக்காக (Political Affairs) மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அரசு நிர்வாக நடைமுறைகளிலோ அல்லது கோப்புகளைக் கையாளும் அதிகாரப்பூர்வ பணிகளிலோ இவர் தலையிட முடியாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பொதுவாக இத்தகைய பதவிகள் முதலமைச்சரின் பதவிக்காலம் வரை மட்டுமே நீடிக்கும் தன்மை கொண்டவை. நிர்வாக ரீதியான குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டு, ‘தனிப்பட்ட அரசியல் ஆலோசகர்’ என்ற வாசகம் அரசாணையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 தமிழக அரசியல் வரலாற்றில் இத்தகைய நியமனங்கள் புதியவை அல்ல. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில், ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு நிர்வாக ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இருப்பினும், ஒரு கட்சித் தலைவரின் தனிப்பட்ட ஜோதிடரை இப்பதவியில் அமர்த்தியிருப்பது தற்போதைய அரசியல் சூழலில் உற்றுநோக்கப்படுகிறது.

 இந்த புதிய நியமனத்திற்கான ஊதியம் மற்றும் இதர சலுகைகள் குறித்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அரசின் உத்தரவில் இதற்கான நிபந்தனைகள் தனியாக வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, இதுபோன்ற பதவிகளுக்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வழிகாட்டுதல்களின்படி, ஒரு குறிப்பிட்ட தொகுப்பூதியம் (Consolidated Pay) நிர்ணயிக்கப்படும். இது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற நிரந்தர ஊதிய விகித முறையின் கீழ் வராது. மேலும், இப்பதவியானது முதலமைச்சரின் பதவிக்காலம் வரை மட்டுமே நீடிக்கும் 'தற்காலிக நியமனம்'  என்பதால், ஓய்வூதியம் போன்ற நிரந்தரப் பலன்கள் இவருக்குப் பொருந்தாது.

 , விஜய் முதலமைச்சராவார் என ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் கணித்ததாக பல வீடியோக்களும் இணையத்தில் பரவி வந்தன. அதேபோல், தேர்தல் முடிவுக்கு முன் தவெக தலைவராக, முதலமைச்சர் விஜய் திருச்செந்தூர், ஷீரடி உள்ளிட்ட ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணங்களிலும் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் அவருடனே இருந்தார். அப்போதும் இது பெரும் பேசு பொருளானது.

யார் இந்த ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல்: , விஜய் முதலமைச்சராவார் என ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் கணித்ததாக பல வீடியோக்களும் இணையத்தில் பரவி வந்தன. அதேபோல், தேர்தல் முடிவுக்கு முன் தவெக தலைவராக, முதலமைச்சர் விஜய் திருச்செந்தூர், ஷீரடி உள்ளிட்ட ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணங்களிலும் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் அவருடனே இருந்தார். அப்போதும் இது பெரும் பேசு பொருளானது.

போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் ரூ.5,000 டெபாசிட் செய்தால், 60 மாதங்களுக்குப் பின் எவ்வளவு பணம் கிடைக்கும்? | Post Office

ரூ.5,000 டெபாசிட்.. 60 மாதங்களுக்கு பின் எவ்வளவு கிடைக்கும்? | Post Office

  • RDல் மாதம் ரூ.5,000 டெபாசிட் செய்தால் 5 ஆண்டுகளில் ரூ.3,56,830 கிடைக்கும்.

  • மொத்த முதலீடு ரூ.3,00,000; இதில் வட்டி வருமானம் மட்டும் சுமார் ரூ.56,830 ஆகும்.

  • இந்த திட்டத்தில் 6.7% வட்டி விகிதம்; குறைந்தபட்சம் மாதம் ரூ.100 டெபாசிட்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article