Last Updated:Jul 23, 2026 2:44 PM IST
திருநெல்வேலி ராம் சினிமாஸ் திரையரங்கில் அதிகாலை முதலே ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்கியும், நடனமாடியும் திரைப்பட வெளியீட்டை திருவிழாவைப் போலக் கொண்டாடினர்.

ஜனநாயகன்' பார்க்க 1,700 இலவச டிக்கெட்டுகள்
நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானதை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு திரையரங்குகளில் அதிகாலை முதலே ரசிகர்கள் திரண்டு திரைப்படத்தை உற்சாகமாக வரவேற்றனர்.
இதையொட்டி, நெல்லை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன், தனது தொகுதியைச் சேர்ந்த சுமார் 1,700 பேருக்கு 'ஜனநாயகன்' திரைப்படத்தைப் பார்ப்பதற்காக இலவச டிக்கெட்டுகளை வழங்கினார். அவரது இந்த முயற்சி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருநெல்வேலி ராம் சினிமாஸ் திரையரங்கில் அதிகாலை முதலே ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்கியும், நடனமாடியும் திரைப்பட வெளியீட்டை திருவிழாவைப் போலக் கொண்டாடினர். மேலும், விஜய்யின் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து, முழக்கங்கள் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அவரது கடைசி திரைப்படமாக கருதப்படும் 'ஜனநாயகன்' ரசிகர்களுக்கு உணர்வுபூர்வமான தருணமாக அமைந்துள்ளது. திரைப்படத்தை வரவேற்ற ரசிகர்கள், விஜய்யின் திரைப்பயணத்துக்கு நன்றி தெரிவித்து, அவரது அரசியல் பயணத்திற்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
ரசிகர்கள் கூறுகையில், "ராம் சினிமாஸ் எப்போதும் விஜய் ரசிகர்களின் கொண்டாட்ட மையமாக இருந்து வருகிறது. அதிலும் எம்.எல்.ஏ ஆர்.எஸ். முருகன் வழங்கிய 1,700 இலவச டிக்கெட்டுகள் இந்த திரைப்பட வெளியீட்டு விழாவை மேலும் சிறப்பித்துள்ளன" என்று தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Location :
Tirunelveli,Tirunelveli,Tamil Nadu
.png)








English (US) ·