விவசாயி வெட்டிப் படுகொலை... இரவு நேரத்தில் வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள்... முன்விரோதமா...?

1 hour ago 10

Last Updated:Mar 09, 2026 3:59 PM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகவேல் என்ற விவசாயி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி ஆறுமுகவேல்
விவசாயி ஆறுமுகவேல்

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் விவசாயி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றமான சூழல் நிலவியது. வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்தவரின் உயிரைப் பறித்த மர்ம நபர்கள் சிக்குவார்களா?

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்தவர் ஆறுமுகவேல். 63 வயதான இவர் விவசாயம் செய்து வந்தார். இவர், தனது வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆறுமுகவேலை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வயலில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அவர்கள் வருவதைப் பார்த்ததும் மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். படுகாயமடைந்த விவசாயி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விரைந்து வந்தனர்.

பின்னர், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முன்விரோதம் காரணமாக இந்த கொலைச் சம்பவம் நடந்ததா? குடும்பத் தகராறா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

விவசாயி வெட்டிப் படுகொலை... இரவு நேரத்தில் வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள்... முன்விரோதமா...?

Read Entire Article