எடப்பாடி முதுகில் குத்திவிடுவார்..! பிரேமலதாவை திமுக கூட்டணிக்கு அனுப்பி வைத்ததே SP வேலுமணி தான்.! உண்மையை போட்டுடைத்த விஐபி.!

2 hours ago 17

SP Velumani: எடப்பாடி பழனிசாமியால் அதிமுக தமிழகம் முழுவதும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும். பாஜகவிற்கு கட்சியை அடமானம் வைத்துவிட்டதாக புகழேந்தி கூறியுள்ளார். 

2 Min read

Published : Mar 09 2026, 05:24 PM IST

15

Image Credit : Asianet News

புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதன்மை செயலாளர் புகழேந்தி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட அதிமுக டெபாசிட் வராது. எடப்பாடி அணி அதிமுக தமிழகம் முழுவதும் மூன்றாவது இடத்திற்கு செல்லும். திமுக கூட்டணி வலுவாக உள்ளது. திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி. கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கட்சியை ஒழித்து கட்டி விட்டார்கள். தமிழகத்திலும் குமரியிலும் பல இடங்களில் மூன்றாவது இடத்திற்கு அதிமுக செல்ல காரணம் பழனிசாமி சாமி. பாஜகவிற்கு கட்சியை அடமானம் வைத்து அவர்கள் பின்னர் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

25

Image Credit : ADMK

எங்கள் கட்சி கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேர்தல் ஆணையத்தால் முறையாக பதிவு செய்து அக்டோபரில் பல பிழை திருத்தம் செய்து பல சட்ட திட்டங்களை பின்பற்றி துவங்கியது. நான் கட்சி ஆரம்பித்து இருக்கிறேன் 234 தொகுதியிலும் போட்டியிட்ட போறேன் வெற்றி பெறுவேன் என்று எடப்பாடி பழனிசாமி போல் முட்டாள்தனமாக சொல்லமாட்டேன். இப்போது பவுண்டேஷன் போட்டு இருக்கிறோம் களம் அமைக்க வேண்டும்.

என்னுடைய முக்கியமான கடமை தலைவர் அம்மா வளர்த்த இந்த இயக்கத்தில் அண்ணாவால் ஆட்சிக்கு வந்தோம் இப்படிப்பட்ட இயக்கத்தில் இருந்து தவெக , திமுக செல்லலாம் என்று தினம் தோறும் பல தொண்டர்களிடம் இருந்து அழைப்புகள் வந்தன. ஆகவே பலம் இழந்து நிலைதடுமாறிய தொண்டர்கள் அப்படி நின்ற தொண்டர்களை பாதுகாத்து நிறுத்த துவங்கப்பட இயக்கம் ஆகவே பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவேன்.

35

Image Credit : Asianet News

தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஒழித்து கட்டுவதே என் நோக்கம். விஜய்க்காக இரண்டாம் கட்ட தலைவர்கள் இறங்கி களம் அமைத்தால் அவர்கள் தொடர்பே இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் களம் இறங்க வேண்டும். அவர்கள் களம் இறங்காமல் இருப்பதற்கு காரணம் தெரியவில்லை. அவர்கள் கடந்து செல்ல வேண்டிய பாதை மிக அதிக அளவில் உள்ளது. கொடநாடு வழக்கில் இதுவரை எதற்காக விட்டு வைத்து இருக்கிறீர்கள். இதுவரை ஒருவரை கூட விசாரிக்கவில்லை. அவர் பெயர் தான் பழனிசாமி. ஏராளமான ஊழல் பழனிசாமி வாழ முதல்வர் விட்டு வைத்து இருக்கிறார். அதில் வருத்தம் உண்டு. அது போக இவர் விடியாத அரசு என்கிறார் பழனிசாமி. ஆனால் விடிந்தால் 5000 ரூபாய் அக்கோண்டிற்கு செல்கிறது. இதற்கு மேல் பழனிசாமி எப்படி விடியா அரசு என்று சொல்ல முடியும்.

45

Image Credit : Asianet News

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரேமலதாவிடம் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிடுவார் என்று கூறி திமுகவிற்கு அனுப்பி வைத்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். திமுக கூறியது போல ராஜ்யசபா கொடுத்துள்ளது. ஒரு காலத்தில் போயஸ் தோட்ட வாசலில் மத்திய அமைச்சர்கள் கையை கட்டி கொண்டு சீட்டிற்காக பிச்சை எடுத்து கொண்டு இருந்தார்கள்.

55

Image Credit : x

தற்போது டெல்லி சென்று தெருவில் அலைந்து அமித்ஷா விடம் சென்று எழுபது முடியாது, அறுபது முடியாது என்று கையை கட்டி நிற்கிறார் பழனிசாமி. பாஜக கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறிது வாக்குகள் உள்ளன. ஆனால் அவர்கள் தனித்து நின்று ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியுமா? தனியாக நின்று ஒரு கவுன்சிலர் வெற்றி பெற முடியுமா? அண்ணாமலையை காலி பண்ணி விட்டீர்கள் அருமையாக வேலை செய்து கட்சியை மேலே கொண்டு வந்தவரை பழனிசாமிக்காக காலி செய்தீர்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஊழல் இருந்தால் தவறு. அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சி பரவாயில்லை என்று தெரிவித்தார்

Read Entire Article