ஷாக் நியூஸ்! ஜஸ்பிரித் பும்ராவிற்கு திடீர் வைரஸ் தொற்று: முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம்? ரசிகர்கள் அதிர்ச்சி!

13 hours ago 18

Jasprit Bumrah Health Update in T20 World Cup 2026 : அமெரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கடுமையான வைரஸ் தொற்று காரணமாக பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

2 Min read

Published : Feb 07 2026, 05:12 PM IST

16

டி20 உலகக் கோப்பை 2026

Image Credit : Getty

டி20 உலகக் கோப்பை 2026

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடரானது இன்று பிப்ரவரி 7ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும், கடைசி வரை போராடிய பாகிஸ்தான் 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது.

26

ஜஸ்பிரித் பும்ராவிற்கு திடீர் வைரஸ் தொற்று

Image Credit : Getty

ஜஸ்பிரித் பும்ராவிற்கு திடீர் வைரஸ் தொற்று

இதைத் தொடர்ந்து தற்போது 2ஆவது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் தான் இன்றைய 3ஆவது போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியானது இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

36

 மும்பை வான்கடே மைதானம்

Image Credit : Getty

மும்பை வான்கடே மைதானம்

இந்திய அணியின் கோட்டை என்று சொல்லப்படும் மும்பை வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணி 300 ரன்கள் வரையில் எடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் அபிஷேக் சர்மா, இஷன் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ஷிவம் துபே என்று அதிரடி மன்னன்கள் இருக்கும் நிலையில் அசால்ட்டாக 300 ரன்கள் குவிக்கும் என்று தெரிகிறது.

46

ஜஸ்ப்ரித் பும்ரா வைரஸ் தொற்று

Image Credit : AFP

ஜஸ்ப்ரித் பும்ரா வைரஸ் தொற்று

ஆனால், பந்து வீச்சைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஜஸ்ப்ரித் பும்ரா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் இடம் பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் முகமது சிராஜ் விளையாடுவார் என்று தெரிகிறது. மேலும், அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பெற்றிருக்கிறார். நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 பயிற்சி போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகினார்.

56

முகமது சிராஜ்

Image Credit : AFP

முகமது சிராஜ்

அவருக்குப் பதிலாக முகமது சிராஜ் அணியில் இடம் பெற்றார். இந்த நிலையில் தான் பும்ராவிற்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக சிராஜ் இன்றைய போட்டியில் களமிறங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

66

Image Credit : AFP

அமெரிக்காவிற்கு எதிரான இந்திய அணியின் ஆடும் பிளேயிங் 11:

அவருக்குப் பதிலாக முகமது சிராஜ் அணியில் இடம் பெற்றார். இந்த நிலையில் தான் பும்ராவிற்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக சிராஜ் இன்றைய போட்டியில் களமிறங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

அமெரிக்காவிற்கு எதிரான இந்திய அணியின் ஆடும் பிளேயிங் 11:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், வருண் சக்கரவர்த்தி.

Read Entire Article