மே 26ஆம் தேதி மற்றும் 30ஆம் தேதி ஆகிய தேதிகளில் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு , வட்ட, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட், வடக்கு-கிழக்கு, டௌன்டவுன் ஆகிய எம்ஆர்டி ரயில்பாதைகளில் ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
ஹஜ்ஜுப் பெருநாள், விசாகத் தினத்துக்கு முந்தைய நாள்களில், பொதுப் போக்குவரத்து நிறுவனங்களான எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில், பேருந்து வழித்தடங்களில் சேவைகளை நீட்டிக்கவுள்ளன.
மே 26ஆம் தேதி மற்றும் 30ஆம் தேதி ஆகிய தேதிகளில் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு , வட்ட, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட், வடக்கு-கிழக்கு, டௌன்டவுன் ஆகிய எம்ஆர்டி ரயில்பாதைகளில் ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படுகிறது.
வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு ரயில்பாதைகளில் சிட்டி ஹால் நிலையத்திலிருந்து பாசிர் ரிஸ், துவாஸ் லிங்க், மரினா சவுத் பியர், ஜூரோங் ஈஸ்ட் ஆகிய இறுதி நிலையங்களை நோக்கிச் செல்லும் கடைசி ரயில்கள் பின்னிரவு 12.30 மணிக்குப் புறப்படும் என்று செவ்வாய்க்கிழமை (மே 12) வெளியிட்ட அறிக்கையில் எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.
வட்ட ரயில் பாதையில் மெரினா பே நிலையத்திலிருந்து இரவு 11.57 மணிக்கும் ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்திலிருந்து இரவு 11.30 மணிக்கும் கடைசி ரயில்கள் புறப்படும்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதையில் பயணம் செய்யும் பயணிகள் நள்ளிரவு 12 மணிக்கு உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்திலிருந்து புறப்படும் கடைசி ரயிலிலோ அல்லது பின்னிரவு 12.12 மணிக்கு பேஷோர் நிலையத்திலிருந்து புறப்படும் ரயிலிலோ செல்லலாம்.
வடக்கு-கிழக்கு ரயில்பாதையில், கடைசி ரயில் ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்திலிருந்து பின்னிரவு 12.30 மணிக்கும், பொங்கோல் கோஸ்ட் நிலையத்திலிருந்து நள்ளிரவு 12 மணிக்கும் புறப்படும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டௌன்டவுன் ரயில்பாதையில், புக்கிட் பாஞ்சாங்கிலிருந்து எக்ஸ்போ நோக்கிச் செல்லும் கடைசி ரயில் பின்னிரவு 12.03 மணிக்குப் புறப்படும், அதே சமயம் எக்ஸ்போவிலிருந்து புக்கிட் பாஞ்சாங் செல்லும் கடைசி ரயில் பின்னிரவு 12.04 மணிக்குப் புறப்படும்.
செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி ரயில் சேவைகளும் இரண்டு இரவுகளிலும் ஏறத்தாழ அரை மணி நேரம் நீட்டிக்கப்படும்.
கடைசி ரயில்கள் செங்காங் நிலையத்திலிருந்து அதிகாலை 1.06 மணிக்கும் பொங்கோல் நிலையத்திலிருந்து அதிகாலை 1.09 மணிக்கும் புறப்படும்.
புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி ரயில் மற்றும் சாங்கி விமான நிலைய ரயில் சேவைக்கான இயக்க நேரங்களில் எந்த மாற்றமும் இருக்காது.
பதினேழு எஸ்பிஎஸ் டிரான்சிட் மற்றும் 18 எஸ்எம்ஆர்டி பேருந்துகளின் சேவை நேரம் நீட்டிக்கப்படுகிறது. கடைசிப் பேருந்து புறப்படும் நேரங்கள் நள்ளிரவு 12.55 முதல் அதிகாலை 1.50 வரை இருக்கும்.
சேவை நேரம் நீட்டிக்கப்படும் பேருந்து சேவைகள் 60A, 63M, 114A, 181, 222, 225G, 228, 229, 232, 238, 240, 241, 243G, 291, 292, 293, 300, 301, 302, 307, 315, 325, 410W, 804, 812, 901, 911, 912A/B, 913, 920, 922, 973A, 974A மற்றும் 983A ஆகியவையாகும்.
.png)






English (US) ·