1,500க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியவர் கைது

1 hour ago 11

5fe5f9b8-e6e6-4d10-badd-611f20647319

சரத் சுப்ரமணியன். - படம்: தினமலர்

சென்னை: அமெரிக்காவில் இருந்தபடியே, கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் முக்கியப் பிரமுகர்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில், சென்னை விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சரத் சுப்பிரமணியன் சங்கர் என்பவர், அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் புதன்கிழமை (ஜூலை 22) எதிஹாட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்த அவரைத் குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் மீது தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதே விசாரணைக்குக் காரணம் என விளக்கம் அளிக்கப்பட்டது.

சரத் சுப்பிரமணியன் சங்கரிடம் தமிழ்நாடு பயங்கரவாதத் தடுப்புப்படை அதிகாரிகள் விசாரித்தனர். அவர் அமெரிக்காவில் இருந்தபடி வணிக விமானங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அரசியல் பிரமுகர்கள், ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரிகள் எனப் பல்வேறு முக்கியமான நபர்கள், நிறுவனங்களைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது உறுதியானது.

கடந்த 2023 முதல் 2025 வரை 1,500க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் அடங்கிய மின்னஞ்சலை அவர் அனுப்பியுள்ளார். தன்னை யாரும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக அவர் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளார்.

எனினும், இவ்வாறு அனுப்பப்பட்ட ஒரு மிரட்டல் மின்னஞ்சலுக்குத் தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் இருந்து பதில் அனுப்பியதை அடுத்து சரத்தின் மின்னிலக்க அடையாளத்தைத் தமிழகக் காவல்துறை கண்டுபிடித்தது.

அதன் பின்னர் ஆறு மாதங்கள் அவரது நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. மேலும், தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு, அவரது விவரங்களை இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சென்னை வந்தபோது சரத் சரத் சுப்ரமணியன் கைது செய்யப்பட்டார்.

Read Entire Article