Last Updated:Feb 26, 2026 6:57 PM IST
Tamil Actress | முதல் படத்தில் மெகா ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் நாயகியாக இருந்த இந்த நடிகை 18 வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.

முதல் படமே தமிழில் அறிமுகம்... அந்த அறிமுக படமே மெகா ஹிட்... தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இந்த நடிகை இன்று ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருக்கிறார். கடந்த 18 வருடங்களில் ஒரு படம் கூட வாய்ப்பில்லாமல் இருந்த இவர் இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகையாக ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
கடந்த 2002-ம் ஆண்டு முரளி, வடிவேலு நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’. தஹா இயக்கத்தில் ராதா, பி.வாசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘இ பறக்கும் தள்ளிகா’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். அதனையும் தஹா தான் இயக்கி இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. ‘சுந்தரா டிராவல்ஸ்’ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பலருக்கும் ஃபேவரைட்டான படமாக இப்படம் திகழ்கிறது.
இந்நிலையில் தற்போது இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இதற்கு ‘சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட்’ என்று பெயரிட்டுள்ளது படக்குழு. சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ராதா. இந்தப் படத்தில் இவரது யதார்த்தமான நடிப்பு மற்றும் அழகான தோற்றம் கவனிக்கும்படி இருந்தது. சுந்தரா டிராவல்ஸ் படத்திற்குப் பிறகு அவர் சில படங்களில் நடித்தார். கார்த்திக் மற்றும் ஜெமினி கணேசன் நடித்த 'கேம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
ராதா ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். சினிமாவில் ஆர்வம் கொண்ட அவர், மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தபோதுதான் அவருக்கு 'சுந்தரா டிராவல்ஸ்' பட வாய்ப்பு கிடைத்தது. தமிழ் ரசிகர்களுக்கு அவரைப் பார்த்தவுடன் ஒரு "பக்கத்து வீட்டுப் பெண்" போன்ற தோற்றம் இருந்ததால் எளிதில் கவர்ந்தார். 'சுந்தரா டிராவல்ஸ்' மிகப்பெரிய வெற்றி பெற்றும், அவருக்குப் பெரிய பட்ஜெட் படங்கள் அல்லது முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் அமையவில்லை.
அவர் நடித்த ஜங்ஷன், கேம், அடாவடி, காத்தவராயன் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் ஒரு 'ஸ்டார்' அந்தஸ்தை அவரால் எட்ட முடியாமல் போனது. 'சுந்தரா டிராவல்ஸ்' படத்திற்குப் பிறகு, சில காலம் சினிமா வாய்ப்புகள் இன்றி இருந்தபோது அவர் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்தார். ராதாவின் பெயர் சினிமா செய்திகளை விட, க்ரைம் மற்றும் அரசியல் செய்திகளில் அதிகம் அடிபட்டன.
சென்னையில் வசிக்கும் ஒரு தொழிலதிபர் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக அவர் புகார் அளித்தார். இது பல மாதங்களாக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்படியான சிக்கல்களில் இருந்து மீண்டு வந்த ராதா சீரியல் பக்கம் திரும்பினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா 2 சீரியலிலும், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பவித்ரா சீரியலில் வில்லியாகவும் நடித்து வந்தார்.
சீரியலை தொடர்ந்து தற்போது மீண்டும் சினிமாக்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரின் அண்மை கால புகைப்படம் தான் இது. உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார். 'சுந்தரா டிராவல்ஸ்' ராதாவா இது என கேட்கும் அளவுக்கு ஆள் மாறிபோயுள்ளார்.
அண்மையில் ராதா நடிப்பில் 'ஸ்வீட்டி நாட்டி கிரேஸி' என்கிற படம் ரிலீசானது. இதேபோல் விஜய் ஆண்டனியுடன் ஒரு படம், 'வெட்டு' ஆகிய படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் களமிறங்கியுள்ளார்.

இந்தியா - ஜிம்பாப்வே பலப்பரீட்சை.. சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!
இந்தியா - ஜிம்பாப்வே பலப்பரீட்சை.. சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!
இந்தியா - ஜிம்பாப்வே பலப்பரீட்சை.. சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!
இந்தியா - ஜிம்பாப்வே பலப்பரீட்சை.. சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!
.png)







English (US) ·