2027 ‘கேட்’ தேர்வை
சென்னை அய்அய்டி நடத்துகிறது!
சென்னை, ஜூலை 21- அடுத்த ஆண்டுக்கான ‘கேட்’ நுழைவுத் தேர்வை சென்னை அய்அய்டி நடத்துகிறது. இதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 3-ஆவது வாரத்தில் தொடங்குகிறது.
ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் எம்இ, எம்டெக், எம்எஸ்சி உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளில் சேர ‘கேட்’ (GATE) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். அதேபோல, ஒருசில தனியார் கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன. ஒன்றிய அரசின் ஒருசில பொதுத் துறை நிறுவனங்கள் கேட் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனங்களையும் மேற்கொள்கின்றன.
கேட் தேர்வு மதிப்பெண் 3 ஆண்டுக்கு செல்லத்தக்கது. கேட் நுழைவுத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு அய்அய்டி அல்லது அய்அய்எஸ்சி (இந்திய அறிவியல் நிறுவனம்) நடத்தும். அந்த வகையில், வரும் 2027-ஆம் ஆண்டில் கேட் தேர்வு நடத்தும் பொறுப்பு சென்னை அய்அய்டியிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, 2027 கேட் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை சென்னை அய்அய்டி நேற்று (20.7.2026)வெளியிட்டது. அதன்படி, 2027 பிப்.6, 7, 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) 30 பாடங்களில் கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வில் புதிதாக ‘ரோபோட்டிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன்’ பாடம் சேர்க்கப்படஉள்ளது. தேர்வுக்கான இணைய வழி விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 3-ஆவது வாரத்தில் தொடங்க உள்ளது. முழு விவரங்களையும் https://gate2027.iitm.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விரிவாக அறியலாம் என்று சென்னை அய்அய்டி அறிவித்துள்ளது.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூலை 30-இல் விநியோகம்
அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு!
சென்னை, ஜூலை 21- 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Marksheets) வரும் ஜூலை 30-ஆம் தேதி வழங்கப்பட உள்ளதாக அரசுத் தேர்வுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்நிலை மற்றும் உயர் கல்விச் சேர்க்கைக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அசல் சான்றிதழ்கள் வழங்கப்படும் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
மாணவர்கள் சான்றிதழ்களைப் பெறச் செல்லும்போது தங்களின் தேர்வு எண் மற்றும் தேவையான அடையாளச் சான்றுகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
.png)
5 hours ago
6







English (US) ·