Bigg Boss 9: பர்சனல் டார்கெட்டாக மோதும் பாரு - சபரி.! திவாகரை தொடர்ந்து சீண்டும் கம்ருதீன்

3 hours ago 7

Last Updated:October 14, 2025 6:58 PM IST

Bigg Boss: மாஸ்க் டாஸ்கில் பிக்பாஸ் வீட்டாரும், சூப்பர் டீலக்ஸ் வீட்டாரும் மோதிக்குள்ளும் ப்ரோமோக்களால் எபிஸோடைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

 பர்சனல் டார்கெட்டாக மோதும் பாரு - சபரி.! திவாகரை தொடர்ந்து சீண்டும் கம்ருதீன்
Bigg Boss 9: பர்சனல் டார்கெட்டாக மோதும் பாரு - சபரி.! திவாகரை தொடர்ந்து சீண்டும் கம்ருதீன்

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் புதிய திருப்பங்களும் சண்டைகளும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றன. இதுவரை நடைபெற்ற டாஸ்க்குகள் போட்டியாளர்களின் திறமையையும், பொறுமையையும் சோதித்தன.

ஆனால் இன்றைய டாஸ்க் “மாஸ்க் சேலஞ்ச்” எனப்படும் ஒரு கடுமையான விளையாட்டாக இருந்து, போட்டியாளர்களுக்கிடையே நேரடி மோதல்களை உருவாக்கி இருக்கிறது. பிக் பாஸ் வெளியிட்ட ப்ரோமோவிலேயே அதற்கான சுவாரஸ்யம் முழுமையாகத் தெரிகிறது.

இன்றைய டாஸ்கின் விதி மிகவும் வித்தியாசமானது. கார்டன் ஏரியாவில் மொத்தம் 18 மாஸ்க்குகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த வாலில் 17 ஸ்லாட்டுகள் மட்டுமே உள்ளன. அதாவது ஒருவரின் மாஸ்க்கிற்கு இடம் கிடைக்காது. அந்த மாஸ்க்கு வைக்கப்படாத நபர் நேரடியாக டாஸ்கிலிருந்து வெளியேற்றப்படுவார். இதே செயல்முறை தொடர்ந்து ஒவ்வொரு ஸ்லாட்டாக மூடப்பட்டு ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவர். இதுவே போட்டியாளர்களிடையே பதட்டத்தையும், ஆத்திரத்தையும் தூண்ட காரணமாகிறது.

டாஸ்க் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சூழ்நிலை கட்டுக்குள் இருக்கவில்லை. வினோத் கீழே விழுந்து அடிபட்டது ப்ரோமோவில் தெரிகிறது. அதன் பின், பார்வதி மற்றும் சபரி இடையே கடுமையான வாக்குவாதம் வெடிக்கிறது. என்னைத் தனிப்பட்ட பர்சனல் வென்சன்ஸ், பர்சனல் டார்கெட் வைத்து பழிவாங்குகிறார் என்று சபரி மீது பாரு குற்றம் சாட்டுகிறார்.

சபரியும் அதனை ஆமாம் என்று ஒப்புக்கொள்கிறார், இதனைக் கேட்ட திவாகர் வழக்கம் போல பார்வதிக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார். இதன் விளைவாக திவாகர் மற்றும் சபரி இடையே கூடுதல் மோதல் ஏற்படுகிறது. அடுத்த ப்ரோமோவில் டாஸ்க் நடக்கும் போது திவாகர் தன்னுடைய மாஸ்க்கை தானே எடுத்து வைத்ததாகக் கூற அதற்கு கம்ருதீன் “தூ…” என்று கிண்டலாகச் செய்கிறார். அதனை கவனித்த பார்வதி உடனே தடுக்கிறார். இதையடுத்து FJ மற்றும் சபரி இடையே தீவிரமான பேச்சுவார்த்தை நடக்கிறது.

FJ “நான் ஏதாவது சிறு மாக் செய்தாலும் உடனே குறை சொல்வீர்கள். ஆனால் கம்ருதீன் வாட்டர்மெலான் ஸ்டாரை இப்படிச் செய்வதைப் பார்த்தும் யாரும் எதுவும் சொல்லவில்லை” என்று பேசுவது போல் இருக்கிறது. இந்த ப்ரோமோக்களால் பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரும் இன்றைய இரவு எபிஸோடை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

வினோத்தின் காயம் எவ்வளவு தீவிரம்? பார்வதி-சபரி மோதலின் முடிவு என்ன? திவாகர்-கம்ருதீன் வாக்குவாதம் எந்த திசையில் செல்லும்? மேலும் எந்தெந்த போட்டியாளரின் மாஸ்க்கு வாலில் இடம் பெறாமல் வெளியேற்றப்படுவார்கள்? என்ற அனைத்து கேள்விகளுக்கும் எபிஸோடில் பதில் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சினிமா, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி அப்டேட்டுகள், சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகள், இணையதளக் கதைகள் மற்றும் பலவற்றைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளின் தகவல்களை பெறுங்கள்.

First Published :

October 14, 2025 6:56 PM IST

Read Entire Article