Diwali Festival : பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி.. டிப்ஸ் கொடுத்த தீயணைப்பு துறை !

6 hours ago 2

Last Updated:October 15, 2025 10:17 AM IST

அரசு ஒதுக்கும் நேரத்தில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இதனால் உங்களுக்கும், அருகில் உள்ளவர்களுக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது.

+

Diwali

Diwali Festival

தீபாவளி பண்டிகையின் சிறப்பு அம்சமே பட்டாசு வெடிப்பது தான். ஆனந்ததில் வெடிக்கும் பட்டாசுகள் சில நேரங்களில் சிறிய விபத்து முதல் பெரிய விபத்து வரை‌ ஏற்படுத்தும். நாடு முழுவதும் வருகின்றன அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு எப்படி பாதுகாப்பாக வெடிப்பது என்பது குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுவதை காணலாம்.

அரசு ஒதுக்கும் நேரத்தில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இதனால் உங்களுக்கும், அருகில் உள்ளவர்களுக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது. சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும்போது தனியாக வைத்தால் வெடி அவரிகளின் அருகில் வெடித்து தீக்காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பெற்றோர்கள், பெரியவர்கள் அருகே இருந்து அவர்கள் முன்னிலையில் வெடி வெடிக்க வேண்டும். தனியாக வெடி வெடிக்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது.

சிறுவர்கள் வெடி வைக்கும்போது கம்பி மத்தாப்பு போன்ற வெடிகளில் நீளமான குச்சி வைத்து வைக்கவும். வெடி நெருப்பு வைத்து விட்டு வெடிக்கவில்லை என்றால் அதன் அருகில் செல்வது, கையில் எடுப்பது போன்ற செயல்களை தடுக்கவும். அலுவலகங்கள், மருத்துவமனைகள், நோயாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் இருக்கும் இடத்தில் வெடி வைப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும். ரோடுகள், முக்கிய சாலை, வாகனங்கள் செல்லும் இடங்கள், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் வெடி வைப்பது அறவே தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.

நெருப்பு பட்டு தீபரவாமல் இருக்க மணல் வாளி, தண்ணீர் வாளி அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். எதிர்பார்த்த விதமாக காயம்பட்டால், காயம்பட்ட அப்பகுதியை தண்ணீரில் நனைத்து ஈரமான காட்டன் துணியில் மூலம் சுற்றி கட்டி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தங்களுடைய பகுதிகளில் தீவிபத்து ஏற்பட்டால் 112 என்ற தீயணைப்பு எண்ணை தொடர்பு கொண்டால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கவும் என தெரிவித்தனர். அப்புறம் என்ன ? இந்த தீபாவளியை விபத்து இன்றி பாதுகாப்பான தீபாவளியாக குடுப்பத்துடன் கொண்டாடி மகிழுங்கள் மக்களே...!

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.

First Published :

October 15, 2025 10:17 AM IST

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

Diwali Festival : பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி.. டிப்ஸ் கொடுத்த தீயணைப்பு துறை அதிகாரிகள் !

Read Entire Article