Last Updated:Feb 16, 2026 8:53 PM IST
விஜயின் ‘கில்லி’ திரைப்படமும், அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் ஒரே நாளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயின் ‘கில்லி’ திரைப்படமும், அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் ஒரே நாளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‘கில்லி’. இந்தப் படத்தில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்தார். படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்தார். இந்தப் படம் பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதே நாளில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ‘துணிவு’. மஞ்சுவாரியர் நாயகியாக நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. சாமானியர்களிடம் கார்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் கடன் வசூல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விஷயங்களை பேசியது.
இந்நிலையில் விஜயின் ‘கில்லி’ படமும், அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் ஒரே நாளில் ரீ - ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அஜித்தின் ‘மங்காத்தா’ வெளியாகி வரவேற்பை பெற்றது. ரஜினியின் ‘படையப்பா’ படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடினர். சமீப காலமாக புதிய திரைப்படங்களை விட ரீ-ரிலீஸ் படங்களுக்கான மவுசு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
.png)





English (US) ·