School Leave | ஒரே நாளில் மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு... எங்கெங்கு, எப்போது தெரியுமா?

1 hour ago 14

Last Updated:Feb 26, 2026 6:46 PM IST

Local Holiday | தமிழகத்தில் மார்ச் மாதத்தில் வரக்கூடிய முக்கிய ஆன்மீகத் திருவிழாக்களை முன்னிட்டு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர்.

Generated image

தமிழகத்தில் மார்ச் மாதத்தில் வரக்கூடிய முக்கிய ஆன்மீகத் திருவிழாக்களை முன்னிட்டு, தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர்.

 சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் 194-வது அவதாரத் திருநாளை முன்னிட்டு வரும் மார்ச் 4-ம் தேதி புதன்கிழமை அன்று கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 இந்த விடுமுறையானது மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதனை ஈடு செய்யும் வகையில், மார்ச் 7-ம் தேதி சனிக்கிழமை அன்று இந்த மூன்று மாவட்டங்களிலும் முழு வேலை நாளாகச் செயல்படும் என்று ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

 மேலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் கூடுதலாக ஒரு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக் கொடை விழாவினை முன்னிட்டு மார்ச் 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு ஈடாக மார்ச் 14-ம் தேதி சனிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த உள்ளூர் விடுமுறை அறிவிப்புகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தற்போது நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு எந்தவித இடையூறையும் ஏற்படுத்தாது. தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 அவர்கள் வழக்கம் போல் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவசர காலப் பணிகளைக் கவனிக்கும் அரசு அலுவலகங்கள் மட்டும் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்றும் ஆட்சியர்கள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

India Vs Zimbabwe | இந்தியா - ஜிம்பாப்வே மோதும் சூப்பர் 8 சுற்று.. சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!

இந்தியா - ஜிம்பாப்வே பலப்பரீட்சை.. சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!

  • இந்தியா - ஜிம்பாப்வே பலப்பரீட்சை.. சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article