T20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கலக்கிய ஹர்மீத் சிங், 2017ல் மும்பை காவல்துறையால் கைது செய்யபட்டிருந்தார். அவர் ஏன் கைதானார்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
2 Min read
Published : Feb 08 2026, 09:28 PM IST
12

Image Credit : Social Media
இந்தியாவை பரிதவிக்க வைத்த அமெரிக்கா
T20 உலகக்கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் 77/6 என பரிதவித்த நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவின் மேஜிக் ஆட்டத்தாலும், பவுலிங்காலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பவுலிங்கில் அசத்திய USA வீரர் ஹர்மீத் சிங் 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் என 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
USA ஸ்டார் வீரர் ஹர்மீத் சிங்
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ஹர்மீத் சிங், தற்போது அமெரிக்க அணிக்காக விளையாடி வருகிறார். மும்பையில் பிறந்து வளர்ந்த ஹர்மீத், 2012-ல் இந்தியா அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற அணியில் முக்கிய வீரராக இருந்தார். பின்னர் ஐபிஎல்-லும் தீவிரமாக இருந்த ஹர்மீத், இடையில் ஏற்பட்ட சரிவிலிருந்து மீள அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.
22
Image Credit : Getty
ஹர்மீத் சிங் மும்பை காவல்துறையால் கைது
2024-ல் அமெரிக்க அணியில் அறிமுகமான அவர், இப்போது அணியின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளார். இதுவரை 22 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் அமெரிக்காவிற்காக விளையாடியுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஹர்மீத் தொடர்பான ஒரு சர்ச்சைக்குரிய சம்பவம் செய்தியாகி வருகிறது. வான்கடேவில் அவர் சிறப்பாக பந்துவீசுவதைப் பார்த்த ரசிகர்கள், பழைய சர்ச்சை ஒன்றையும் கிளப்பியுள்ளனர். அதாவது ஹர்மீத் சிங் முன்பு மும்பை காவல்துறையால் கைது செய்யப்பட்டது தான்.
2017ல் நடந்த சம்பவம்
2017-ல் மும்பை அந்தேரி ரயில் நிலைய நடைமேடையில் ஹர்மீத் காரை ஓட்டிச் சென்றது அப்போது பெரிய செய்தியானது. பயணிகள் நிறைந்த நடைமேடையில் அதிகாலையில் காரை ஓட்டிச் சென்றதற்காக இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ரயில் பாதைக்கு அருகே நிறுத்தப்பட்ட காரால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும், 2013-ல் நடந்த ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங் வழக்கிலும் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது, ஆனால் பின்னர் போலீசார் இவரை குற்றமற்றவர் என விடுவித்தனர். இந்த சர்ச்சைகள் அனைத்தையும் கடந்து, இன்று அமெரிக்க கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக ஹர்மீத் சிங் ஜொலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
.png)
1 hour ago
18






English (US) ·