Tata SUV: ரூ.5.59 லட்சம் எஸ்யூவி செய்த மாஸ்! 5 ஆண்டுக்குள் 8 லட்சம் விற்பனையை கடந்த டாடா கார் எது?

22 hours ago 8

Tata SUV: இந்த கார் அறிமுகமானது முதல் 2026 ஜூன் இறுதி வரை 7,97,479 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. அதன்பின், 2026 ஜூலை தொடக்கத்தில் மேலும் 2,521 யூனிட்கள் விற்பனையாகி, 8 லட்சம் விற்பனை என்ற மயில்கல்லை எட்டியது.

2 Min read

Published : Jul 20 2026, 10:14 PM IST

15

ரூ.5.59 லட்சத்தில் கார்

Image Credit : Google

ரூ.5.59 லட்சத்தில் கார்

இந்திய காம்பாக்ட் எஸ்யூவி சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா பஞ்ச் தொடர்ந்து வலுவான வரவேற்பைப் பெற்று வருகிறது. 2021 அக்டோபரில் அறிமுகமான இந்த மாடல், ஐந்து ஆண்டுகளுக்கு குறைவான காலத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையை பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம், டாடா நெக்சானுக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை எட்டிய நிறுவனத்தின் இரண்டாவது எஸ்யூவி என்ற பெருமையையும் டாடா பஞ்ச் பெற்றுள்ளது. குறைந்த விலை, பல்வேறு எரிபொருள் தேர்வுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை இதன் வெற்றிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

25

டாடா பஞ்ச் விற்பனை

Image Credit : Tatamotors

டாடா பஞ்ச் விற்பனை

2026 ஜூன் மாத இறுதிவரை டாடா பஞ்ச் மொத்தம் 7,97,479 யூனிட்கள் விற்பனையாகியிருந்தது. அதன் பின்னர், ஜூலை மாத தொடக்கத்தில் கூடுதலாக விற்பனையான வாகனங்களின் மூலம் 8 லட்சம் விற்பனை என்ற இலக்கை கடந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் விற்பனை வேகம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் 21,006 யூனிட்கள் விற்பனையாகியுள்ள நிலையில், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 60,321 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் 7 லட்சம் விற்பனையானது, அடுத்த ஐந்து மாதங்களிலேயே மேலும் ஒரு லட்சம் விற்பனையாகியிருப்பது அந்த பிரபலத்தை வெளிப்படுத்துகிறது.

35

டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்

Image Credit : X@AarizRizvibasedauto

டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்

இந்த வளர்ச்சிக்கு 2026 ஜனவரியில் அறிமுகமான டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. புதிய தோற்றம், மேம்படுத்தப்பட்ட உட்புற வடிவமைப்பு, கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள் ஆகியவை வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளன. தற்போது இந்த எஸ்யூவி பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் மின்சார வேரியண்டுகளில் கிடைக்கிறது. ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை ரூ.5.59 லட்சம் என்பதால், முதல் முறையாக எஸ்யூவி வாங்குபவர்களிடமும் இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

45

டாடா பஞ்ச் வசதிகள்

Image Credit : X@AarizRizvi

டாடா பஞ்ச் வசதிகள்

டாடா பஞ்சில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதிகபட்சமாக 120 குதிரைத்திறன் வரை வழங்கக்கூடும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.8 முதல் 20.09 கிலோமீட்டர் வரை, சிஎன்ஜி மாடல் ஒரு கிலோ எரிவாயுவுக்கு 26.99 கிலோமீட்டர் வரையும் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்திறன் நகர்ப்புற மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

55

டாடா பஞ்ச் அம்சங்கள்

Image Credit : google

டாடா பஞ்ச் அம்சங்கள்

வசதிகளைப் பொறுத்தவரை, 360 டிகிரி கேமரா, 10.25 அங்குல தொடுதிரை, 7 அங்குல முழு டிஜிட்டல் கருவி திரை, சன் ரூஃப், வயர்லெஸ் மொபைல் சார்ஜிங், தானியங்கி வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் குரூஸ் கட்டுப்பாடு போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், பாரத் என்சிஏபி மோதல் சோதனையில் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றிருப்பது இந்த மாதலின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் டாடா பஞ்ச் இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பமான காம்பாக்ட் எஸ்யூவிகளில் ஒன்றாக தொடர்ந்து திகழ்கிறது.

Read Entire Article