அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா காதல் கதை எப்படி தொடங்கியது? அக்கா சாரா தம்பி காதலுக்கு தூது போனது எப்படி? என்பது குறித்த சுவாரஸ்யமான தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.
1 Min read
Published : Feb 26 2026, 06:50 PM IST
14

Image Credit : twitter
அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா திருமணம்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தொழிலதிபரின் மகள் சானியா சந்தோக் திருமணம் மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்து வருகின்றன. அர்ஜுனுக்கும், சானியா சந்தோக்கும் காதல் எப்படி மலர்ந்தது? என அதிகம் பேசப்படவில்லை. இதனால் இவர்களின் காதல் கதை சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
24
Image Credit : X/@Vipintiwari952/@ThadhaniManish_
காதல் மலர்ந்தது எப்படி?
அர்ஜுன் - சானியா காதல் தொடங்கும் முன்பே, சச்சின் குடும்பத்துடன் சானியா நெருக்கமாக இருந்தார். ஏனெனில் சச்சினின் மகள் சாரா. சாராவும் சானியாவும் நெருங்கிய தோழிகள். சாரா மற்றும் சானியா பல வருடங்களாக தோழிகள். லண்டன், கென்யா என பல பயணங்களில் இருவரும் ஒன்றாகவே இருந்தனர். இந்த நட்பின் போதுதான் அர்ஜுனுக்கு காதல் மலர்ந்தது. சச்சின் வீட்டு நிகழ்ச்சிகளிலும் சானியா பங்கேற்றுள்ளார். இங்கேயே இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
34
Image Credit : fb
தம்பியின் காதலுக்கு தூது சென்ற சாரா
சச்சின் டெண்டுல்கரும், சானியாவின் தாத்தா ரவி காயும் நண்பர்கள். சச்சின் கிரிக்கெட் ஜாம்பவான் என்றால், ரவி காய் கிராவிஸ் குழுமத்தின் தலைவர். இரு குடும்பத்தினருக்கும் இடையே பல வருடங்களாக நட்பு நீடித்து வருகிறது. அக்கா சாரா மூலம் சானியாவுடன் ஏற்பட்ட அர்ஜுனின் நட்பு காதலாக மாறியுள்ளது. அர்ஜூன் காதலுக்கு சாரா தூது சென்றுள்ளார்.
பின்பு இருவரின் காதல் தெரியவந்து இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் உடனடியாக பச்சைக் கொடி காட்டிவிட்டனர். மும்பையில் பிரம்மாண்ட திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
44
Image Credit : X/sachin_rt
திருமணத்தில் பங்கேற்கும் பிரபலங்கள்
அர்ஜுன் - சானியா திருமணத்தில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி, மகாராஷ்டிர முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
.png)
1 hour ago
15







English (US) ·