ஆடிஷன் நடத்தி அரங்கேறும் மோசடி.. போலி அழைப்புகளை நம்ப வேண்டாம்.. சிவகார்த்திகேயன் நிறுவனம் எச்சரிக்கை..

1 hour ago 11

Last Updated:May 10, 2026 10:38 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சிவகார்த்திகேயன், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 'சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ்' மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, SK புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் பின்வருமாறு-

கோலிவுட் வட்டாரங்களில் நடிகர் நடிகை தேர்வு நடத்தி மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் பல காலமாக சுற்றி வருகின்றன.

பிரபலமான நிறுவனத்தின் பெயரில் சமூகவலைதளங்களில் போலியாக அறிவிப்புகளை வெளியிட்டு, ஆடிஷன் நடத்துகிறேன் என்கிற பெயரில் இவர்கள் நடத்தும் மோசடிகளால் சினிமா புரொடக்ஷன் நிறுவனங்கள் அவப்பெயரை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

வாய்ப்பு கேட்டு வருபவர்களிடமே பணம் பறிப்பது, பெண்களிடம் ஆடிசன் என்கிற பெயரில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது என இவர்களது அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தங்கள் நிறுவனம் பெயரில் யாரேனும் அத்துமீறலில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சிவகார்த்திகேயன், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 'சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ்' மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

‘கனா’, ‘நெஞ்​ச​முண்டு நேர்​மை​யுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்​டுக்​காளி’, ‘தாய்க்​கிழ​வி’ போன்ற வெற்றிப் படங்கள் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவரது தயாரிப்பு நிறுவனத்தை பயன்படுத்தி சிலர் மோசடி செய்து வருவதாக அந்நிறுவனத்தினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இது தொடர்பான வாட்​ஸப் மெசேஜ்களை சமூக வலைத்தளத்தில் பகிர்த்துள்ள 'சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ்' சார்பில் அறிக்கை ஒன்று பகிரப்பட்டுள்ளது.

அதில் "எங்கள் நிறுவனத்தின் திரைப்படங்களுக்கான நடிகர்களை தேர்வு செய்யப்படுவது இயக்குநர்களோ, ஒருங்கிணைப்பாளர்களோ, காஸ்​டிங் ஏஜென்ட்களோ அல்லது வேறொரு நபர்களோ தேர்ந்தெடுப்பதில்லை.

எஸ்கே புரொடக் ஷன்ஸ் வெளியிடும் எந்த ஒரு அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் தங்களது அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் மட்டும் தான் வெளி​யிடப்​படும். இது தொடர்பாக வாட்​ஸ்​அப் செய்​தி​கள், மின்னஞ்சல்​கள், அழைப்​பு​கள் அல்லது சமூக வலைத்தளங்களை நம்ப வேண்டாம்.

'சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ்' பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என அந்நிறுவனம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

First Published :

May 10, 2026 10:38 PM IST

Read Entire Article