இந்து மகா சபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது!

3 hours ago 2

Last Updated:October 14, 2025 3:24 PM IST

சென்னையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோடம்பாக்கம் ஸ்ரீ மற்றும் அவரது அத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கோடம்பாக்கம் ஸ்ரீ
கோடம்பாக்கம் ஸ்ரீ

சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இந்து மகா சபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமி ஒருவர், சென்னையில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு அடைக்கலம் தேடி வந்துள்ளார். அப்போது, அவரது அத்தையே இந்து மகா சபை தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீயுடன் கிழக்கு கடற்கரை சாலைக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. தன்னுடன் வந்த சிறுமியை கோடம்பாக்கம் ஸ்ரீ பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்த அந்த சிறுமியை, தனது வீட்டிலேயே தங்குமாறு அவரது அத்தை வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, அவசர உதவி எண்ணை அழைத்து நடந்தவற்றை கூறியுள்ளார். தனது அத்தை தன்னை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தி தள்ளியதாகவும், கோடம்பாக்கம் ஸ்ரீ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

மேலும், பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை வைத்து அத்தை தன்னை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் காவல் இணை ஆணையர் கவனத்திற்கு உடனடியாக சென்ற நிலையில், சிறுமியின் அத்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து, கோடம்பாக்கம் ஸ்ரீயும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.

First Published :

October 14, 2025 11:15 AM IST

Read Entire Article