திமுக-வை ஒழிப்பேன் என்று சவால் விட்டவர்கள் பலர்... விஜய்யை போட்டுத் தாக்கும் உ.பி.ஸ்!

3 hours ago 7

திமுகவை ஒழிப்பதாக சவால் விடுத்த தலைவர்களின் பட்டியலுடன், கட்சியின் பவளவிழா மற்றும் நூற்றாண்டு விழா நோக்கிய பயணத்தை ஒப்பிட்டு திமுக தொண்டர்கள் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) ஒழிப்பதாகக் காலம்காலமாகக் கட்சியினர் சவால் விடுத்து வந்த போதும், அந்த இயக்கம் வலுவடைந்து நூற்றாண்டு விழா நோக்கிப் பயணிப்பதை வலியுறுத்தி, திமுக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

முன்னாள் முதல்வர் ராஜாஜியின் படத்துடன் பகிரப்படும் அந்தப் பதிவில், திமுக-வை ஒழிக்க முயன்றதாகக் கூறப்படும் தலைவர்கள் மற்றும் ஆண்டுகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

விஜய் குறித்து விமர்சனம்

திமுக-வை ஒழிப்பேன் என்று சவால் விட்ட தலைவர்களின் பட்டியலில் விஜய் பெயரை இணைப்பதன் மூலம், அவரை தங்கள் தற்காலிக அரசியல் எதிரியாகவும் அவரும் தோல்வி அடையப் போகிறார் என்றும் சித்தரித்துள்ளது.

விஜய் கட்சியின் பிரச்சாரப் பாடலில் வரும் “உங்க விஜய் நான் வாறேன்” என்ற வரியையும் விமர்சித்துள்ளது. "நான் வாறேன்" என்று கூறுபவர்களுக்காக வரலாறு காத்திருக்காது என்று கூறுவதன் மூலம் விஜய்யின் அரசியல் பிரவேசம் தேவையற்றது என்று சாடுகிறது.

திமுகவின் டிரெண்டிங் பதிவு 

திமுக தொண்டர்கள் மத்தியில் டிரெண்டிங்கில் இருக்கும் அந்தப் பதிவு இதோ:

திமுக வை ஒழிப்பேன்

1957 ல் இராசகோபாலச்சாரி.

திமுக வை ஒழிப்பேன்

1962 ல் காமராசர்.

திமுக வை ஒழிப்பேன்

1967 ல் E.V.K. சம்பத்.

திமுக வை ஒழிப்பேன்

1972 ல் எம். ஜி. ஆர்.

திமுக வை ஒழிப்பேன்

1999 ல் G.K. மூப்பனார்.

திமுக வை ஒழிப்பேன்

2002 ல் J. ஜெயலலிதா.

திமுக வை ஒழிப்பேன்

2013 ல் சீமான்

திமுக வை ஒழிப்பேன்

2016 ல் மோடி

திமுக வை ஒழிப்பேன்

2019 ல் அமித்ஷா

திமுக வை ஒழிப்பேன்

2021 ல் எடப்பாடி

திமுக வை ஒழிப்பேன்

2025 ல் விஜய்

------------------------

1949 திமுக உதயம்

1974 திமுக வெள்ளிவிழா

கலைஞர் முதலமைச்சர்

1999 திமுக பொன்விழா

கலைஞர் முதலமைச்சர்

2024 திமுக பவளவிழா

ஸ்டாலின் முதலமைச்சர்

2049 திமுக நூற்றாண்டு விழா

கொண்டாடும்.

ஒரு இயக்கம் நூற்றாண்டு காலம் நீடிப்பதன் பொருள் யாதெனில்,

அவ்வியக்கம் செயல்படும் மண்ணில் வாழும் வெகுமக்களின் தேவையாக இருப்பதால் தான்.

தேவையற்ற ஒன்று உதிர்ந்து போகும்.

அழிந்து போகும்.

"நான் வாறேன்" என்பவர்களுக்காக எப்போதும் வரலாறு காத்திருக்காது.

இருப்பவர்களில் சிறந்த ஒருவரைத் தேர்த்தெடுத்து பயணிக்க தொடங்கிவிடும்."

இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது. உணர்ச்சிப்பூர்வமான இந்தப் பதிவு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. திமுக தொண்டர்களிடையே உற்சாக அலையை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article