Last Updated:Feb 26, 2026 6:30 PM IST
கோவையில் 2.66 லட்சம் குழந்தைகளுக்கு இலவச வைட்டமின்-A திரவம் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில், கோவை மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள சுமார் 2.66 லட்சம் குழந்தைகளுக்கு இலவசமாக வைட்டமின்-A திரவம் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
குழந்தைகளின் பார்வை திறன் மேம்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி உயர்வு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைட்டமின்-A குறைபாடு காரணமாக ஏற்படும் கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளைத் தடுக்க இந்த திரவம் முக்கிய பங்காற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி 23 முதல் 28 வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப அரசு சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் செய்யப்பட்டுள்ளன.
பெற்றோர் தங்களது 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளை அருகிலுள்ள அரசு சுகாதார மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு அழைத்து சென்று இலவசமாக வைட்டமின்-A திரவத்தை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் இந்த திரவம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் எதிர்கால நலனை உறுதி செய்யும் இந்த முயற்சியில் பெற்றோர் முழுமையாக பங்கேற்று பயன்பெற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மாடியில் தூங்கிய பெண் மர்டர்... வீதியில் வசித்துவந்த பெண் அடித்து கொலை
சென்னையில் ராமாபுரம், முகப்பேர் பகுதிகளில் 2 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்
ராமாபுரத்தில் 37 வயது புஷ்பா மொட்டை மாடியில் தூங்கியபோது கொலை
முகப்பேர் பகுதியில் 52 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை
.png)







English (US) ·