மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வினாத்தாள் கசிவு வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட்டதாக பிரதமர் மோடி பதிவு
Published:27 mins agoUpdated:27 mins ago

நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி 34 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் 26 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கியும் காக்ரோச் ஜனதா கட்சி பேரணி நடத்தியது. காங்கிரஸும் பிரதமர் மோடியின் வீட்டின் முன் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், இந்தப் போராட்டத்திற்குப் பதிலளிப்பது போல மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நீட்
"நமது இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் தான் எங்களுக்கு எல்லாவற்றையும் விட மிக முக்கியம்!
வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக 'விரைவு நீதிமன்றங்களை' அமைக்க முடிவு செய்துள்ளோம்.
இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது அமையும்.
நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்க முயல்பவர்கள் எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள்." என குறிப்பிட்டுள்ளார்.
Nothing is more important than the welfare and future of our youth!
We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in thisâ¦
.png)






English (US) ·