“உணவுத் தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” - அமைச்சர் உறுதி!

6 hours ago 7

Last Updated:Jul 19, 2026 7:15 AM IST

“கடந்த குறுவை மற்றும் சம்பா பருவங்களில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் விரைவில் அரவைக்கு அனுப்பி வைக்கப்படும்” - அமைச்சர் வெங்கடரமணன்

அமைச்சர் வெங்கடரமணன்
அமைச்சர் வெங்கடரமணன்

எல் நினோ பாதிப்பு காரணமாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறை மாணவியர் விடுதியில், உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாணவிகளிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த குறுவை மற்றும் சம்பா பருவங்களில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் விரைவில் அரவைக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும் “சேமிப்பு கிடங்குகள் பற்றாக்குறையை சமாளிக்க, ரயில்வேக்கு சொந்தமான காலியிடங்களில் சேமிப்பு கிடங்குகள் அமைக்க ஒப்பந்தம் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது” என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்... ‘விக்ரம் 1’-ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை!

முன்னதாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடந்த 17ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம். சி. ராஜா ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீர் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது, மாணவர்கள் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்த நிலையில், உடனடியாக அவற்றை சரிசெய்ய உத்தரவிட்டிருந்தார் விஜய். தமிழ்நாடு முழுக்க உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளிலும் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் அமைச்சர் வெங்கடரமணன் மயிலாடுதுறை விடுதியில் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.

Read Entire Article