உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரா நாடாக இந்தியா திகழ்கிறது: நிர்மலா சீதாராமன்

6 hours ago 7

Last Updated:Jul 19, 2026 7:12 AM IST

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல சவால்களுக்கு மத்தியில் தொழில் நிறுவனங்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது - நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் மிக வேகமாக வளர்ந்துவரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தொழில் முனைவர்களுக்கான மாநாடு நடைபெற்றது. இதன் இறுதிநாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சிதாராமன், டிஜிட்டல் புரட்சியில் சர்வதேச நாடுகளுக்கு இந்தியா முன் மாதிரியாக திகழ்வதாகக் கூறினார். யுபிஐ மூலம் ஒவ்வொரு மாதமும் 20 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல சவால்களுக்கு மத்தியில் தொழில் நிறுவனங்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

உலக அரங்கில் இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Read Entire Article